சின்னத்திரை படப்பிடிப்பு நடத்துவது குறித்து தமிழக அரசுக்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை..

சென்னை 13 மே 2021

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்துவது குறித்து தமிழக அரசுக்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை.

அனைத்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சார்பில் சங்கத்தின் தலைவி திருமதி சுஜாதா விஜயகுமார், மற்றும் பொதுச் செயலாளர் திருமதி குஷ்பு சுந்தர். வழிகாட்டுதலின் படி நேற்று மாலை நான்கு மணிக்கு தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக செய்தித்துறை அமைச்சர் திரு சுவாமிநாதன் அவர்கள் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் பொருளாளர் பாலேஷ்வர்‌‌, துணைச் செயலாளர் டிவி ஷங்கர், ஈ. ராம்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சங்கம் சார்பில் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்துவது குறித்து அரசு கூறும் நெறிமுறைகள் பின்பற்றி நடப்போம் என்று உறுதி கூறி அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டோம்.

அமைச்சர் நம்பிக்கை தரும் விதமாக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பங்கேற்றது. மேலும் இவர்களுடன் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சேவியர் மரியா பெல்லும் உடனிருந்தார்.

error: Content is protected !!