நடிகர் சென்ராயனுக்கு கொரோனா தொற்று உறுதி.

சென்னை 12 மே 2021

நடிகர் சென்றாயனுக்கு கொரோனா தொற்று உறுதி.

கொரோனா குருமா என கவனக்குறைவாக இருந்த எனக்கே இப்போது கொரோனா தாக்கியுள்ளது என்று நடிகர் சென்ராயன் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார் நடிகர் சென்ராயன்

மூடர் கூடம் திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சென்றாயன்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகர் சென்றாயன்.

தமிழக மக்களிடையே பட்டு தொட்டி எங்கும் மிக் பிரபலமானார்.

தற்போது நடிகர் சென்ராயனுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டதை அறிந்த அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

“வணக்கம் மக்களே. நான் நடிக்கல, உண்மையாவே ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன். வாழ்க்கையில ஜெயிக்கணும், சினிமாவுல ஜெயிக்கணும் என எப்பவுமே வாழ்க்கையை பாசிடிவாகவே பார்ப்பவன் நான்.

ஆனா எனக்கே கொரோனா பாசிடிவ்னு வந்துடுச்சு.

ஆரம்பத்துல கொரோனா குருமா என கவனக்குறைவாக இருந்த எனக்கே இப்போது கொரோனா தாக்கியுள்ளது.

என் வீட்டில் நான் தனிமைப்படுத்திக் கொண்டேன் மனைவி, குழந்தைகள் வேறு அறையில் உள்ளனர்.

மனைவி மட்டும் அவ்வப்போது உணவு கொடுக்க வருவார்.

அதனால் கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ.. மக்களே கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!