ஞானதந்தையை இழந்து விட்டேன் என இலக்கிய ஆளுமை கீரா அவர்களுக்கு நடிகர் சிவக்குமார் இரங்கல்்.
சென்னை 18 மே 2021
ஞானதந்தையை இழந்து விட்டேன் என இலக்கிய ஆளுமை கீரா அவர்களுக்கு நடிகர் சிவக்குமார் இரங்கல்
கி.ரா என்று சுருக்கமாக செல்லமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் பிறப்பு செப்டம்பர் 16, 1923 – மறைவு மே 17, 2021), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர்.
கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைச்செவல் எனற கிராமத்தில் பிறந்தவர் கி.ரா என அழைக்கப்படும்் கி.ராஜநாராயணனின் அவருடைய முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா
1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப் பாடுகளையும் விவரிப்பவை.
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன்.
பள்ளிக்கூடத்தை பார்க்காமல் மழையை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’.
என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா.,
பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர்.
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே.
சாகித்யஅகாடமி விருது இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தற்போது பாண்டி சேரியில் வாழ்ந்து வருகிறார்.
2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.
இவர் தற்போது பாண்டிச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
கரிசல்காட்டு விவசாயி, கதைசொல்லி, வட்டார சொல்லகராதியை உள்ளிட்டவைகளை உருவாக்கியவர் இவர்.
சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக்கதைகள் என பல்வேறு நூல்களையும் புதினங்களையும் படைத்திருக்கிறார்.
இவர் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காக 1991ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார்
1958இல் எழுத்துப் பணியைத் தொடங்கினார்.
ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் அவரது எழுத்தின் திறனால் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர், கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்பட்டவர் .
கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடுதாசி , வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற காலத்தால் அழியாத படைப்புகளை தந்த
கி. ராஜநாராயணன்.
தன்னுடைய தள்ளாத வயதிலும் பல புத்தகங்களை எழுதிக் கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் கி. ராஜநாராயணன் வயது முதிர்வின் காரணமாக
2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 97ஆம்
நள்ளிரவில் இயற்கை எய்தினார்.
அவருக்கு வயது 99.
ஞானதந்தையை இழந்து விட்டேன் என இலக்கிய ஆளுமை கீரா அவர்களுக்கு நடிகர் சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கீரா அவர்களின் மறைவு குறித்து நடிகர் சிவக்குமார் கூறியதாவது..
நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்து
விட்டேன்.
தற்போது 80 வயதில் எனது ஞானதந்தை 99 வயது வாழ்ந்த கீரா அவர்களை இழந்து விட்டேன்.
கீரா அவர்களும் கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய் தந்தையர். எனக்கு அவருக்கும் 35 வருடகாலமாக உறவு உண்டு.
அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் பாண்டிச்சேரி சென்று கலந்துகொண்டிருக்கிறேன்.
அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடுதாசி , வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார்.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாயததற்கு மனமார வருந்துகிறேன்.
மீண்டும் அவரது சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
பிராத்திக்கும், நடிகர்
சிவக்குமார்.











