நடிகையின் 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது.

சென்னை 06 ஜூன் 2021

நடிகையின் 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது.

ஐந்து வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாகின் 3- என்ற இந்தி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் பியர்ல் புரி.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார்.

இவருக்கு 31 வயதாகும் இவர் மும்பையில் வசித்து வருகிறார்.

இந்தியா முழுவதும் பிரபலமான நாகினி சீரியலின் 3ம் பாகத்தில் இவர் நடித்துள்ளார் பியர்ல் வி புரி.

மேலும், நாகார்ஜுனா ஏக் யோதா, பேபனா பியார், பிரம்மரக்‌ஷாஸ் 2 உள்ளிட்ட ஏகப்பட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பியர்ல் வி புரி, இன்ஸ்டாகிராமிலும் போட்டோக்களை போட்டு பல இளம் ரசிகைகள் மத்தியில் பிரபலமானவர்.

இந்த நிலையில், இவருடன் நடிக்கும் சக நடிகை ஒருவர் சம்பவத்தன்று தனது 5 வயது மகளுடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்துள்ளார்.

சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி சிறுமி ஒருவரை சில ஆண்டுகள் முன்னதாக பியர்ல் வி புரி சீரழித்ததாகவும், சில ஆண்டுகள் அவருடன் தொடர்பில் இருந்து விட்டு பின்னர், அவரை கழட்டி விட்டதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

அப்போது நடிகர் பியர்ல் புரி, அந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்துள்ளது.

இதுதொடர்பாக சிறுமியின் தந்தை சமீபத்தில் மும்பை போலீசில் புகார் அளித்தார்.

சம்பவம் வசாய்  பகுதியில் நடந்தது என்பதால், வழக்கு அங்குள்ள வாலிவ் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இது பற்றி வாலிவ் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மும்பையில் இருந்த நடிகரை அம்போலி போலீஸ் உதவியுடன் வாலிவ் போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது கற்பழிப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இவரை வசாய் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நடிகர் பியர்ல் புரியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது..

error: Content is protected !!