பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு.

சென்னை 25 மே 2021

பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு.

சென்னை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது பி.எஸ்.பி.பி பள்ளி.

இந்த பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் குவிந்தன.

கடந்த 20 ஆண்டுகளாக அந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்பறை மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் செய்த பாலியல் சில்மிசங்கள் குறித்து பேசப்பட்டன.

அதாவது ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் புகைப்படங்களை தனக்கு அனுப்ப சொன்னதாக மாணவிகள் குற்றம் சாட்டினர்.

மாணவிகளிடம் பாலியல் இரட்டை அர்த்தங்களுடன் கேள்வி கேட்பாராம்.

மேலும் மாணவிகளின் உடல் அமைப்பு பற்றி விமர்சிப்பது, அவர்கள் அணிந்து வரும் உடையை வைத்தும் விமர்சித்து பேசுவாராம்.

ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஆன்லைன் வகுப்பு எடுக்கும் போது வெப் கேமரா முன்பாக வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஆசிரியர் வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்தும், அந்த அசிரியரைக் கூப்பிட்டு எச்சரித்ததோடு பள்ளி நிர்வாகம் வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனவும் புகார்கள் கூறுகிறது

இந்த செய்திகள் வைரலானதை தொடர்ந்து திமுக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி. தன் ட்விட்டரில்….

‘சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்.” என கருத்து தெரிவித்தார்.

இதனையடுத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புகார் குறித்து விசாரிக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரனை நடத்த பள்ளியில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவின் விசாரணை தகவல்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் விரைவில் அளிக்கப்படும் என தெரிகிறது.

இந்த தொல்லை குறித்து அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறையும் தெரிவித்துள்ளது.

ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தையும் விசாரிப்பதாக கூறியிருக்கிறார்கள்.

போலீசார் ஆசிரியர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

error: Content is protected !!