பல வருடங்களாக நிறைய ஆசிரியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலம்.

சென்னை 26 மே 2021

பல வருடங்களாக நிறைய ஆசிரியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலம்.

சென்னை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது பி.எஸ்.பி.பி பள்ளி.

இந்த தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் தமிழகத்தில பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 20 ஆண்டுகளாக அந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்பறை மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் செய்த பாலியல் சில்மிசங்கள் குறித்து பேசப்பட்டன.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைது செய்து ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் ஆசிரியர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு முன்னதாக, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நங்கநல்லூரில் உள்ள ராஜகோபாலன் வீட்டிலிருந்த அவரது செல்போன், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால் அதிலுள்ள வாட்ஸ் அப் மேசேஜ்களை ராஜகோபாலன் டெலிட் செய்துள்ளார்.

ஆனாலும் சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை போலீசார் திரும்ப மீட்டனர்.

இந்த விசாரணையில்… கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.

இரவில் வாட்ஸ்அப்பில் சாட் செய்யும்படி மாணவிகளை கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

மேலும் மாணவிகளின் அந்தரங்க போட்டோக்களை அனுப்ப சொல்வாராம்.

இதே பள்ளியைச் சேர்ந்த மேலும் சிலர் ஆசிரியர்
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இவை வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க அசோக்நகர் மகளிர் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகவியல் ஆசிரியர்
ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் 94447 72222 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க முன்வர வேண்டும் என போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!