‘கே.ஜி.எப். 2’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை 07 ஜூலை 2021
‘கே.ஜி.எப். 2’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எப்’.
இந்த கே.ஜி.எப் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது.
தற்போது இந்த கே.ஜி.எப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இந்த கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தில் நடிகர் யாஷுடன் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தை முதலில் ஜுலை 16-ந் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால், கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாம் அலை அதிக அளவில் இருந்ததால் திரையரங்கு திறக்கப்படாத காரணத்தால் திரைப்படத்தின் பணிகள் முடிவடையாததால் திரைப் படத்தின் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்படுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
.இந்த நிலையில், கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் புதிய வெளியீடு தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி முதல் பாகம் வெளியானதை போலவே கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் இந்த கே.ஜி.எப் 2 திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ்க்குள் இயல்பு நிலை திரும்பி, திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி கிடைத்துவிடும் என்பதால், கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் வெளியிடுவது திரைப்படத்திற்கு பிளஸ் ஆக அமையும் என படக்குழுவினர் கருதுகின்றனர்.











