நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ திரைப்படத்தின் படக்குழுவினருக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்.
சென்னை 10ஆகஸட் 2021
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ திரைப்படத்தின் படக்குழுவினருக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்
கொரோனா வைரஸ் நோய் தொற்று குறைந்து வருகிறது என்று நினைத்துக்கொண்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் தமிழக அரசின் உத்தரவின்படி, பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
லைகா நிறுவனம் தயாரிக்க நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘டான்’.
இந்தஅனிருத் இசையமைத்து வருகிறார்.
இதில் சிவகார்த்திகேயனுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பாலம் ஆற்றங்கரை பகுதியில் நேற்று மாலை நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் (Don) திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மேம்பாலம் பகுதியில் நடைபெற்றதால் நடிகர் சிவகார்த்திகேயனை காண்பதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.
இதனால் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறை பின்பற்றாமல் அங்கு படப்பிடிப்பை காண நின்றனர்.
இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
மேலும், படப்பிடிப்பு நடத்துபவர்கள் அவர்களின் வாகனங்களை மெயின் ரோடு பகுதியில் நிறுத்தியதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக தகவல் அறிந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மேலும் சமூக இடைவெளியின்றி குவிந்து நின்றதால், படப்பிடிப்பை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இந்த படப்பிடிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன், கதாநாயகி பிரியங்கா, ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ஊர் மக்கள் நூற்றுக்கணக்கில் வேடிக்கை பார்க்க திரண்டனர்.
அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை எனவும் நிறைய பேர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை எனவும் சொல்லப்படுகின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் காவல் துறையினர் உதவியுடன் மக்களை கலைந்து போகச் செய்தனர்.
தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா? என அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இந்த விசாரணையில் அனுமதியின்றி அந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து டான் படக்குழுவினருக்கு வருவாய்த்துறையினர் ரூ.19,400 அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.











