இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை கலைஞர் டிவி பெரிய விலைக்கு கைப்பற்றி உள்ளது.

சென்னை 26 ஆகஸ்ட் 2021 இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை கலைஞர் டிவி பெரிய விலைக்கு கைப்பற்றி உள்ளது.

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கதாநாயகனாக ஆர்யாவும் கதாநாயகியாக துஷாரா நடிப்பில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

முரளி ஜி ஓளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் உள்ள அனைத்து கேரக்டர்களும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

ஆனாலும் திமுக கட்சிக்கு ஆதரவாக நிறைய காட்சிகள் உள்ளன எனவும் சர்ச்சைகளும் எழுந்தன.

தற்போது ஊரடங்கிற்கு பிறகு இந்த படத்தை தியேட்டர்களிலும் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

எனவே தியேட்டர்களில் வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கலாம்.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் தொலைக்காட்சி ( சேட்லைட் ) ஒளிபரப்பு உரிமையை கலைஞர் டிவி பெரிய விலைக்கு கைப்பற்றி உள்ளது.

இந்த சேட்டிலைட் உரிமை தகவலை நடிகர் ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசப்பட்டினம் படங்களின் ஒளிபரப்பு சேட்லைட் உரிமையையும் கலைஞர் டிவி வாங்கியுள்ளது என்பதையும் ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆதரவு படத்தை கலைஞர் டிவி வாங்கியுள்ளது எனவும் திமுக ஆட்சிக்கு வந்து விட்டதால் இனி படங்களின் டிவி உரிமை கலைஞர் டிவிக்கே செல்லும் எனவும் கமெண்ட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

இன்று இதற்கான ஒப்பந்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நடிகர் ஆர்யா, கலைஞர் தொலைக்காட்சி CFO திரு. கார்த்திக், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி ஆகியோர் உள்ளனர்

https://twitter.com/arya_offl/status/1430845074947002370?s=19

error: Content is protected !!