சத்ரியன் படத்தில் வரும் வசனம் போல… பழைய பன்னீர் செல்வமா வரணும் என நெட்டிசன்கள் கேப்டனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை 07 செப்டம்பர் 2021 சத்ரியன் படத்தில் வரும் வசனம் போல… பழைய பன்னீர் செல்வமா வரணும் என நெட்டிசன்கள் கேப்டனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வருடந்தோறும் மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்வது வழக்கம்.

அதைப்போல் இந்த வருடமும் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக
துபாய் சென்றார்.

அவருடன் அவரது இளைய மகன் சண்முகபாண்டியனும் சென்றுள்ளார்.

இந்த நிலையில், சிகிச்சைக்காக துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த், தான் நலமுடன் இருப்பதாக புகைப்படத்துடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,.

“நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்.

நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சத்ரியன் படத்தில் வரும் வசனம் போல… பழைய பன்னீர் செல்வமா வரணும் என நெட்டிசன்கள் கேப்டனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கேப்டன் விஜயகாந்த் நடித்த திரைப்படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘சத்ரியன்’.

இந்த திரைப்படத்தை தான் விஜய் நடிப்பில் ‘தெறி’யாக இயக்கினார் அட்லி என்பது குறிப்பிடத்தக்கது.

Am doing well. Watching ‘Satriyan’ movie, with Sisters who taking care of me.

நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்.

error: Content is protected !!