மட்டி திரை விமர்சனம் ரேட்டிங் – 3 25 /5.

நடிகர் நடிகைகள் – யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ், ரெஞ்சி பணிக்கர், ஹரீஷ் பெராடி,ஐ.எம்.விஜயன், சுனில் சுகதா, மனோஜ் கின்னஸ், ஷோபா மோகன், கோட்டயம் ரமேஷ், ஜோ ஹாரி, அஜித் கோஷி, ரோஷன் சந்திரா, பினீஷ் பாஸ்டின், அபு வளையங்குளம், மோலி கண்ணமலி, சிவதாஸ் மட்டனூர், ஹரிஷ் பெங்கன், அமித் சிவதாஸ் நாயர், மற்றும் பலர்.

தயாரிப்பு –பிகே 7 கிரியேஷன்ஸ்.

இயக்கம் – பிரகாபால்.

ஒளிப்பதிவு – கே.ஜி.ரதீஷ்.
.
படத்தொகுப்பு – ஷான் லோகேஷ்.

இசை – ரவி பஸ்ரூர்.

திரைப்படம் வெளியான தேதி – 10 டிசம்பர் 2021

ரேட்டிங் – 3 25 /5

பிரம்மாண்டம் வித்தியாசம் என்றாலே ஹாலிவுட் தான் என்ற பார்வை கண்ணோட்டத்தை முற்றிலுமாக உடைத்திருக்கிறார் இயக்குனர் பிரகாபால்.

கதாநாயகன் ரிதன், மலைப்பகுதியில் வெட்டப்படும் மரங்களை தனது ஜீப்பில் ஏற்றி மலையடிவாரத்திற்கு கொண்டு வரும் வேலை செய்து வருகிறார்.

கதாநாயகன் ரிதன் மற்றும் கார்த்தி இருவரும் அண்ணன் தம்பியாக இருக்கிறார்கள்

அண்ணன் தம்பிக்குள் இருவரும் ஒரு பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார்கள்.

குடும்ப பிரச்சனையின் காரணமாக தனது தம்பி கார்த்தியுடன் பல வருடங்களாக பேசாமல் இருந்து வருகிறார்.

கார்த்தி கல்லூரி படிக்கும் போது மட்டி ரேசில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுகிறார்.

மட்டி ரேசில் தோற்றவர் கார்த்தியை தோற்கடிக்க சபதம் எடுக்கிறார்.

இந்த சபதத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.

தம்பி கார்த்தியை காக்க அண்ணன் கதாநாயகன் ரிதன் களமிறங்குகிறார்.

இறுதியில் அண்ணன், தம்பி இருவரும் ஒன்று சேர்ந்து வில்லனை எதிர்த்தார்களா? மட்டி ரேசில் ஜெயித்தார்களா? என்பதுதான் மட்டி திரைப்படத்தின் மீதிக்கதை.

நடிகர் ரிதன் மற்றும் கார்த்தி இருவரும் அண்ணன் தம்பியாக நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகன் ரிதன் மற்றும் கார்த்தி இருவருக்கும் சரி சமமான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆக்‌ஷன் காட்சிகளில் கதாநாயகன் ரிதன் மிரட்டியெடுத்திருக்கிறார்.

கதாநாயகன் ரிதன் மலைகளில் கார் ஓட்டும் காட்சிகளிலும், வில்லனுடனான சண்டைக்காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.

தம்பியாக கார்த்தி அண்ணனை முறைப்பதும், கிளைமாக்சில் அண்ணனுடன் இணைந்து வில்லனை எதிர்க்கும் இடங்களில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ஈர்க்கிறார்.

ஆனால், இரண்டு பேர் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

கதாநாயகியாக வரும் அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோருக்குப் பெரிதாக வேலை இல்லை.

மட்டி ரேஸ் என்பதே இங்கு பலர் அறிந்திராத புதிதான ஒன்று, அதைச் சரியாக திரைக்கதையில் கோர்த்து, ஒரு பரபரப்பான ஆக்ஷன் திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரகபல்.

ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே இது மாதிரியான ரேஸ் காட்சிகளின் பிரமாண்டத்தைப் பார்த்திருக்கிறோம்.

தமிழில் இதைப் பார்க்க அழகாக இருக்கிறது.

திரைப்படத்தில் காதல், காமெடியை விட ஆக்சன் காட்சிகள் தான் திரைப்படத்தில் மேலோங்கி இருக்கிறது.

அனைத்து ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களைக் கவரும்படி உள்ளன. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

அடர்ந்த காடு பகுதிகளில் மோசமான மலை பகுதிகளில் தாறுமாறாக வேகமாக செல்லும் கார்களை கேமரா பின்தொடர்ந்து துரத்தித் துரத்திப் பயணித்து இருக்கும், ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரதீஷுக்கு பெரிய பாராட்டுகள். கே. ஜி. எஃப் புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் இசை படத்திற்கு பெரிய பலம்.

பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகவும் பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘மட்டி’ திரைப்படம் ஆக்சன் தமிழர்களுக்கு ஹாலிவுட் தரத்தில் விருந்து.

error: Content is protected !!