3.33 திரை விமர்சனம் ரேட்டிங் –2.5 /5.

நடிகர் நடிகைகள் – நடன இயக்குனர் சாண்டி, ஸ்ருதி செல்வம், கௌதம்வாசுதேவ் மேனன், ரேஷ்மா, சரவணன், மைம் கோபி, ரமா, மற்றும் பலர்.

தயாரிப்பு – பாம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ்.

இயக்கம் – நம்பிக்கை சந்துரு.

ஒளிப்பதிவு – சதீஷ் மனோகரன்.

படத்தொகுப்பு – தீபக்  S. துவாரகநாத்.

இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்.

திரைப்படம் வெளியான தேதி – 10 டிசம்பர் 2021

ரேட்டிங் –2.5 /5

உளவியல் ரீதியான திரைப்படங்கள் தமிழ் திரைப்பட உலகில் அபூர்வமாகத்தான் வருகின்றன.

இந்தப் திரைப்படமும் ஒரு உளவியர் ரீதியான திரைப்படம்தான்.

அதை மாறுபட்ட விதத்தில் கொடுக்க வேண்டுமென முயற்சிக்கிறார் இயக்குநர் நம்பிக்கை சந்துரு.

கதாநாயன் சாண்டி, லோன் வாங்கி ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென இருப்பவர்.

கணவனால் கைவிடப்பட்ட அக்கா, அக்கா மகள், தாய் என சிறு வீட்டில் வசித்து வருகிறார்கள்.

3.33 மணியில் பிறந்த அவருக்கு அதே நேரத்தில் ஏதோ கெட்டது ஒன்று நடக்கிறது.

அதே கெட்ட விஷயங்கள் அடிக்கடி கதாநாயகன் சாண்டி கனவில் நடக்கிறது.

கதாநாயகன் சாண்டிக்கு தினம்தோறும் கெட்ட, கெட்ட கனவுகள் வருகிறது.

அவரைச் சுற்றி ‘கெட்டா’ சக்திகள் அதிகம் இருக்கிறது என கூறுகிறார் பாதிரியார்.

இது ஒரு உளவியல் ரீதியான பிரச்சினை என கூறுகிறார் டாக்டர்.

இதனால், மனதளவில் கடும் தடுமாற்றத்தில் இருக்கும் கதாநாயகன் சாண்டி கணவுகளில் இருந்து விடுபட்டாரா ? இல்லையா ? என்பதுதான் இந்த 3.33 திரைப்படத்தின் மீதிக் கதை.

நடன இயக்குனர் சாண்டி முதல் முதலாக
கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 3.33.

நடன இயக்குனர் சாண்டியை டிவி நிகழ்ச்சிகளில் கலகலப்பான ஒருவராகத்தான் பார்த்துள்ளோம்.

நடன இயக்குனர் சாண்டி
மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

இந்தப் திரைப்படத்தில் படம் முழுவதும் அவரை மிகவும் சீரியசான ஒரு இளைஞராகப் பார்க்க முடியவில்லை.

அவரும் தன்னால் முடிந்த வரையில் இயல்பாக நடித்திருக்கிறார்.

ஆனால், கதாநாயகன் சாண்டி என்றாலே ஏரியாவில் ஒரு கலகலப்பு இருக்கும், அது இந்த 3.33 திரைப்படத்தில் மிஸ்ஸிங்.

கதாநாயகன் சாண்டிக்குப் பிறகு அவரது அம்மா ரமா, அக்கா ரேஷ்மா ஆகியோரும் படம் முழுவதும் வருகிறார்கள்.

இருவரும் திடீரெனப் பேயாக மாறி நம்மை பயமுறுத்துகிறார்கள்.

கதாநாயகன் சாண்டியின் காதலியாக ஸ்ருதி செல்வம். காதலன் கதாநாயகன் சாண்டிக்கு ஆதரவாக இருக்கிறார்.

ஆனால் அவரும் ஒரு கட்டத்தில் கதாநாயகன் சாண்டியை பயமுறுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்.

திரைப்படத்தின் டீசர், டிரைலர்களில் கவுதம் வாசுதேவ் மேனன் பெயர் வருவதால் திரைப்படம் முழுவதும் இருப்பார் போலிருக்கிறது என்பதில் ஏமாற்றம்.

இரண்டே இரண்டு காட்சியில் தான் நடித்திருக்கிறார்.

சரவணன், மைம் கோபி ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார்கள்.

ஒரு வீட்டுக்குள்ளேயே திரைப்படத்தை நகர்த்தியிருப்பது இயக்குனர் நம்பிக்கை சந்துரு பாராட்டுக்குரியது.

அதில் முடிந்த அளவிற்கு விதவிதமான கோணங்களில் ஒளிப்பதிவு அமைத்து ஒரே வீட்டில் திரைப்படம் நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்தாமல் இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ் மனோகரன்.

சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு ஒரு வீட்டுக்குள்ளேயே அசத்தலாய் அமைந்துள்ளது.

ஒரு ஹாரர் படம் என்றால் விறுவிறுப்பாக நகர வேண்டும்.

ஆனால், மிக மெதுவாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள்.

ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் ஒரு ஹாரர் படத்திற்கு பின்னணி இசையால் என்ன பயத்தை ஏற்படுத்த முடியுமோ அதைச் செய்திருக்கிறார்.

3.33 பிரச்சினையை ஒரே முறை காட்டினாலே போதும், அதைத் தொடர்ந்து வெவ்வேறு விதத்தில் காட்டி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை பொறுமையை சோதிக்கிறார்கள்.

மொத்தத்தில் 3.33 திரைப்படம் பார்க்கலாம்.