மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண் – பான் இணைக்க கடைசி தேதி தவறினால் ரூ.1000 அபராதம் மத்திய அரசு எச்சரிக்கை.
சென்னை 14 மார்ச் 2022
மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண் – பான் இணைக்க கடைசி தேதி தவறினால் ரூ.1000 அபராதம் மத்திய அரசு எச்சரிக்கை.
ஆதார் எண்ணை பான் கார்டுடன் மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் பயனர்களிடமிருந்து ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் அனைவரும் ஆதார் எண்ணுடன் பான் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற் கொண்டு வருகிறது.
ஆதார் – பான் இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை இதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக பலரால் ஆதாருடன், பான் எண்ணை இணைக்க முடியாமல் போனது.
இதன் காரணமாக ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 – 2022 வரை நீட்டிக்கப்பட்டது.
நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஆதார் – பான் இணைப்புக்கான இந்தக் காலக்கெடு முடிய இன்னும் 15 நாட்களே உள்ளது.
இந்த நிலையில் இந்த இரண்டு ஆவணங்களையும் இணைக்காவிட்டால், பயனர்களின் பான் கார்டு செல்லுபடியாகாமல் போய்விடும்.
அது மட்டுமின்றி ரூ.1,000 அபராதம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
மத்திய பட்ஜெட் கூட்டதொடரின் 2 வது அமர்வு இன்று கூடியிருக்கும் நிலையில், மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் இவ்வாறு தெரிவித்திருக்கிறது.











