சூலூர் கலைப்பித்தனுக்கும் மோட்டார் சைக்கிள் பரிசளித்தார்  நடிகர் சிவகுமார்.

சென்னை 28 ஏப்ரல் 2022 சூலூர் கலைப்பித்தனுக்கும்  மோட்டார் சைக்கிள் பரிசளித்தார்  நடிகர் சிவகுமார்.

தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர். செந்தலை. ந.கவுதமனுக்கும், 1980 களில் தன்னை ஹீரோவாக வைத்து இரண்டு திரைப்படங்கள் எடுத்த தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற –  சூலூர் கலைப்பித்தனுக்கும்  மோட்டார் சைக்கிள் பரிசளித்தார்  நடிகர் சிவகுமார்.

புலவர்.செந்தலை கவுதமனுக்கு 69 வயதாகிறது.

சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார்.

சூலூர்  கலை பித்தனும் 1983 மற்றும் 1986-ஆம் வருடங்களில் நடிகர் சிவகுமாரை வைத்து 2 திரைப்படங்கள் எடுத்தவர்.

அவர் முதியோர் பென்சனை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார்.

பேருந்தில் சலுகை கட்டிணத்தில் சென்று கொண்டிருக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் ரூபாய் 75,000/- மதிப்புள்ள TVS 100 வாங்கி நேற்று பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!