நெஞ்சுக்கு நீதி திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.75/5
நடிகர் நடிகைகள் :- உதயநிதி ஸ்டாலின், தான்யா இரவிசந்திரன், ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி, ராகுல், மயில்சாமி, இளவரசு, சாயாஜி ஷிண்டே, ரமேஷ் திலக், ராட்சசன் சரவணன், அப்துல் லீ, ” மேற்கு தொடர்ச்சி மலை ” அந்தோணி, C ரங்கநாதன், யாமினி சந்தர், ஜீவா ரவி,ரவி வெங்கட்ராமன், பசுபதி ராஜ், ஹல்லோ கந்தசாமி, ” கும்கி ” அஸ்வின், சுஹாசினி சஞ்சீவ், ” அருவி ” பாலா, நக்ஷத்ரா, மற்றும் பலர்.
இயக்கம் :- அருண்ராஜா காமராஜ்.
ஒளிப்பதிவு :- தினேஷ் கிருஷ்ணன் . B.
படத்தொகுப்பு :- ரூபன்.
இசை :- திபு நைனன் தாமஸ்.
தயாரிப்பு :- ஜி ஸ்டுடியோஸ், பே வியு புராஜக்ட்ஸ், ரோமியோ பிக்சர்ஸ்.
ரேட்டிங் :- 3.75 / 5.
ஒரு இந்தியக் குடிமகனுக்கு ஜாதி, மதம், இனம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக் கூடாது,” என்பதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்றுள்ள திரைப்படம்தான் ‘ஆர்டிகிள் 15’.
ஹிந்தி திரைப்பட உலகில் 2019ஆம் வருடம் வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்தான் ‘ஆர்டிகிள் 15’.
அந்த ஆர்டிகிள் 15′ திரைப்படத்தை தமிழ் திரைப்பட உலகிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு
நெஞ்சுக்கு நீதி திரைப்படமாக வெளிவந்துள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் முன்று
தலித் சிறுமிகள் காணாமல் போகிறார்கள்.
இந்த கிராமத்தில் இரண்டு தலித் சிறுமிகளின் கொல்லப்பட்டு ஒரு மரத்தில்
உடல்கள் தூக்கில் தொங்க விடப்படுகிறார்கள்.
மேலும் ஒரு தலித் சிறுமி மட்டும் காணாமல் போகிறார்.
அந்த தலித் சிறுமி மட்டும் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
பொள்ளாச்சி அருகே உள்ள சாதி வேறுபாடுகள் அதிகமாக இருக்கும் அந்த கிராமத்திற்கு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்று இடமாற்றம் செய்யப்படுகிறார்
கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின்.
அந்த இரண்டு தலித் சிறுமிகள் கொலை வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கும்போது கதாநாயகன் உதயநிதி ஸ்டாலினுக்கு பல விதமான தடங்கல்கள் வருகிறது.
அவரை அந்த வழக்கை விசாரிக்க விடாமல் மேலதிகாரியான காவல் துறை கண்காணிப்பாளரும், இன்ஸ்பெக்டரும் அழுத்தம் கொடுக்கிறார்கள்.
பல விதமான தடங்கல்களை கடந்து இரண்டு தலித் சிறுமியின் கொலைக்கான காரணத்தையும் காணாமல் போன சிறுமியை கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் கண்டுபிடித்தாரா? இல்லையா? இரண்டு தலித் சிறுமியின் கொலைக்கு யார் காரணம்
குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடித்தாரா? இல்லையா? காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் மீதிக் கதை.
இந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் கதாநாயகனாக விஜயராகவன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின்.
இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து இருக்கிறது.
தேவையான இடங்களில் மட்டும் கோபத்தை வெளிக்காட்டும் அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
நேர்மையான காவல்துறை அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அதேபோல் அந்த கதாபாத்திரத்தில் மிடுக்குடன் இருக்கிறார் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின்.
இதற்கு முந்தைய திரைப்படங்களில் கலகலப்பாகவே பார்த்த உதயநிதி ஸ்டாலின்யை இந்த திரைப்படத்தில் சீரியசான கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு புதிதாக இருக்கிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஊக்குவிக்கும் மனைவியாக இருக்கிறார்.
கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் மனைவியாக கதாநாயகி தன்யா ரவிச்சந்திரன்.
கணவன், மனைவி இருவரும் போனில் உரையாடும் காட்சிகள்தான் திரைப்படத்தில் இருக்கிறது.
கிளைமாக்சில் மட்டும் நேரில் வருகிறார் கதாநாயகி தன்யா ரவிச்சந்திரன்.
குமரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆரியின் கதாபாத்திரம் திரைபபடத்திற்கு மிக பெரிய பலம்.
குறைசொல்ல முடியாத நடிப்பை கொடுத்திருக்கிறார் ஆரி.
சில காட்சிகளில் வந்தாலும் ஆரி அர்ஜுனன் அவரது கதாபாத்திரத்தைப் பேச வைக்கிறார்.
காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் சுரேஷ் சக்ரவரத்தியின் வில்லத்தனம் கலந்த நடிப்பு கவனிக்க வைத்திருக்கிறது.
காணாமல் போன தன் தங்கைக்காகப் போராடும் கதாபாத்திரத்தில் ஷிவானி ராஜசேகர்.
அந்த கதாபாத்திரத்தில் யதார்த்த தோற்றத்தில் முத்திரை பதிக்கிறார் ஷிவானி ராஜசேகர்.
இளவரசு, மயில்சாமி, ரமேஷ் திலக், ராட்சசன் சரவணன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.
இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் பின்னணி இசை, ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது.
திபு நினன் தாமஸ் இசையில் கதையுடன் ஒட்டிய இரண்டு பாடல்கள். பின்னணி இசையில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார்.
திரையில் தோன்றும் காட்சிகளின் உணர்வுகளுக்கு உயிரூட்டுகிறது அவருடைய இசை.
அங்காங்கே வரும் பாடல்கள் கவனிக்க வைக்கின்றது.
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
பல்வேறு திரைப்படங்களில் அழகான பொள்ளாச்சியை மட்டுமே பார்த்த நமக்கு பொள்ளாச்சியின் மற்றொரு பக்கத்தைக் காட்டியிருக்கிறார்.
இந்தியில் வெளியான ‘ஆர்டிக்கிள் 15’ திரைப்படத்தை அப்படியே மொழி மாற்றம் செய்யாமல், தமிழுக்காக ஒரு சில காட்சிகளை சேர்த்தும், சிலவற்றை நீக்கியும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.
ஒரு மொழி மாற்றம் திரைப்படமாகப் பார்க்க முடியாத அளவிற்கு நம் ஊர் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.
அதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதைக்களம், கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் அவருக்கு கூடுதல் தாக்கத்தைக் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் மன நிறைவுடன் வெல்லும்.











