ரூத்ர தாண்டவம் திரை விமர்சனம். ரேட்டிங் –2.75 /5
நடிகர் நடிகைகள் – ரிஷி ரிச்சர்டு, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், Y.G.மகேந்திரன், மாளவிகா அவினாஷ்,தம்பி ராமைய்யா தீபா, ராம்ஸ் JSK கோபி, மனோ பாலா, இளங்கோ, காக்காமுட்டை விக்கி, லிங்ககேஷ், கார்த்தி,
மற்றும் பலர்.
தயாரிப்பு – ஜி.எம்.பிலிம் கார்ப்பரேஷன், 7 G பிலிம்ஸ்.
இயக்கம் – மோகன் G.
ஒளிப்பதிவு – பரூக் J பாஷா.
படத்தொகுப்பு – தேவராஜ்
இசை – ஜூபின்.
திரைப்படம் வெளியான தேதி – 30 செப்டம்பர் 2021
ரேட்டிங் –2.75 /5
திரெளபதி திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட உலகை கவனத்தையே தனது பக்கம் திருப்பியவர் இயக்குனர் மோகன் ஜி.
அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம். திரெளபதி திரைப்படத்தில் நடித்த ரிச்சர்டு ரிஷியே இந்த திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவர் தவிர தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ருத்ர தாண்டவம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்திற்கும் வெளியீட்டிற்கு முன்பே ஒரு மிக பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.
ஆனால் இந்த ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் பரபரப்பான சர்ச்சையான விஷயங்கள் எதுவுமில்லை.
அதே சமயம் நம்நாட்டில் நடக்கும் மதமாற்றம், சாதிய பிரச்சினை ஆகியவற்றை வைத்து நடக்கும் சில அத்துமீறல்களை பற்றி மிகவும் துணிச்சலாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன்ஜி.
அவை நியாயமான கருத்துக்களாகவே திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த நேர்மையான காவல்துறை அதிகாரியான கதாநாயகன் ரிச்சர்ட் ரீஷி, சென்னை துறைமுகம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக நியமிக்கப்படுகிறார்.
போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பதற்காக அவரை காவல்துறை மேலதிகாரி நியமிக்கின்றனர்.
தனது அதிரடி நடவடிக்கையில் இறங்கி பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் செய்கிறார் கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி.
இதனால் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கும், கதாநாயகன் ரிச்சர்டு ரிஷிக்கும் இடையே பகை உண்டாகிறது.
இதையடுத்து கடைத்தெருவில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு இளைஞர்களைப் பிடிக்கிறார் கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி.
கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியிடம் இருந்து தப்பிக்க முயலும் போது அந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அந்த இரண்டு இளைஞர்களில் ஒரு இளைஞர் மரணமடைந்து விடுகிறார்.
அந்த இரண்டு இளைஞர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் தான் அவரை வேண்டுமென்றே விரட்டிப் பிடித்து அவரது மரணத்துக்கு கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி காரணமாகிவிட்டதாக கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சர்ச்சை கிளப்பி விடுகிறார்கள்.
இந்த கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி கைது விவகாரம் அரசியலாக்கப்படுகிறது.
இதன் காரணமாக கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியை
வேலையிலிருந்து சஸ்பென்ட் செய்யப்படும் ரிச்சர்ட் ரிஷியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
இதையடுத்து கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி தன்னை நிரபராதி என நிரூபித்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் மீதிக்கதை.
காவல் ஆய்வாளராக ருத்ர பிரபாகரன் என்னும் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக ரிச்சர்டு ரிஷி நடித்துள்ளார்.
மிகவும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக கதாநாயகனாக ரிச்சர்ட். ரிஷி நடித்திருக்கிறார்
மிடுக்கான தோற்றத்துடன் இருக்கும் அவர் போலீஸ் கதாபாத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ரிச்சர்ட் ரிஷி தோற்றத்தில் ஈர்த்தாலும், நடிப்பில் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்.
ஆக்ஷன், எமோஷனல் காட்சிகளில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
ரிச்சார்ட் ரிஷியின் மனைவியாக நடித்திருக்கும் கதாநாயகி தர்ஷா குப்தா முதல் படத்திலேயே மிக திறமையாக நடித்திருக்கிறார்.
திரைப்படத்தில் கதாநாயகி தர்ஷா குப்தாவுக்கு அதிக காட்சிகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
அதேபோல் வில்லனாக நடித்திருக்கும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் வசனங்கள் பேசினாலும் நடிப்பில் சற்று தடுமாறியுள்ளார்.
அவரது குரல் இந்த கதாபாத்திரத்திற்கு மேலும் பலம் சேர்த்து இருக்கிறது.
போதைப் பொருளைக் கடத்தும் ஒரு அரசியல் கட்சித் தலைவர். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் கவுதம் வாசுதேவ மேனனை பார்ப்பது ஆச்சரியம்தான்.
முடிந்த அளவிற்கு தனது வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார்.
கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியின் ஸ்டேஷனில் ஏட்டாக இருக்கும் ஜோசப் கதாபாத்திரத்தில் தம்பி ராமையா. இவரும் ஏறக்குறைய திரைப்படம் முழுவதும் வருகிறார்.
வக்கீலாக நடித்திருக்கும் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், நீதிபதியாக நடித்திருக்கும் மாளவிகா அவினாஸ்.
ரேஞ்சர் ரவியாக நடித்திருக்கும் ராம்ஸ், போதைப் பொருளால் மரணமடையும் இளைஞராக காக்கா முட்டை விக்னேஷ், அவரது அம்மாவாக தீபா, போலீஸ் அதிகாரியாக ஜேஎஸ்கே கோபி என திரைப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம். அனைவருமே
அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
ஆங்காங்கே சில இடங்களில் ட்ரோன்
ஷாட்கள் மூலம் திரைப்படத்தை பிரம்மாண்டமாக காட்ட ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே பாஷா முயற்சி செய்துள்ளார்.
வட சென்னை பகுதியை அப்படியே யதார்த்தமாய் தனது காமிராவில் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பரூக் பாஷா.
ஜுபின் இசையில் இரண்டே பாடல்கள்தான். பின்னணி இசையைக் கொஞ்சம் ஓவராகவே வாசித்திருக்கிறார்.
கிளைமாக்ஸுக்கு முன்பாகவும், கிளைமாக்சிலும் வசனங்கள் காதில் விழாத அளவிற்கு பின்னணி இசை அமைந்துள்ளது.
ஜூபினின் பின்னணி இசை பரவாயில்லை.
சண்டைக் காட்சிகளில் மிரட்டல் காட்டியிருக்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர்.
ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர்கள் நடிப்பில் ஆங்காங்கே சில இடங்களில் சொதப்பி இருந்தாலும்,
திரைப்படத்தின் கதை நன்றாக இருப்பதால் ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களையே படம் பெற்றுள்ளது.
போதை பழக்கத்தால் ஏற்படும் பிரச்னைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையப்படுத்தி திரைப்படம் உருவாகி இருப்பது பாராட்டிற்குரியது.
அம்பேத்கார் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் சொந்தமல்ல நமது நாட்டுக்காக சட்டத்தை இயற்றிய அவர் அனைத்து மக்களுக்கும் சொந்தமானவர்தான்.
அவரது பெயரைச் சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளையும் நேரடியாகவே தாக்குகிறார் இயக்குனர் மோகன் ஜி.
இந்துக்களாக இருப்பவர்களை மதம் மாற்றுதல், மதம் மாறினாலும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி சர்ச்சையை ஏற்படுத்துதல் என போலி மனிதர்களை, ஏமாற்றுக்காரர்களை, வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி.
திரைப்படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம்.
திரைப்படம் நகர்வது தெரியவில்லை என்றாலும் அடிக்கடி யாராவது வசனம் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.
வசனமில்லாத காட்சிகளே இல்லை என்று சொல்லலாம்.
போதைப் பொருளின் பாதிப்புகள்,
அது இளம் தலை முறையினரை எப்படி யெல்லாம் பாதிக்கிறது என்ற மையக் கருத்துடன் இன்றைய போலியான சில சாதிப் பிரச்சினைகளை சொல்லிய விதத்தால் மக்களுக்குத் தேவையான படமாக இப்படம் அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ருத்ரதாண்டவம்’ திரைப்படத்தை பார்க்கலாம்.