ராக்கெட்ரி நம்பி விளைவு திரை விமர்சனம் ரேட்டிங் :- 4.5 / 5.

நடிகர் நடிகைகள் :- ஆர் மாதவன், சூர்யா, சிம்ரன் பாக்கா, முரளிதரன், ரவி ராகவேந்திரா, கார்த்திக் குமார், அமானுல்லா கான், ராஜீவ் ரவீந்திரநாதன், பவ்ஷீல் சஹானி, சாம் மோகன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ரான் டொனாச்சி, ஃபில்லிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, தினேஷ் பிரபாகர், மோகன் ராமன், மிஷா கோஷல், ஷ்யாம் ரங்கநாதன், ஜெகன், மற்றும் பலர்.

இயக்கம் :- ஆர்.மாதவன்.

ஒளிப்பதிவு :- சிர்ஷா ரே.

படத்தொகுப்பு :- பிஜித் பாலா, கே. சசி குமார்..

இசை :- சாம் சி.ஏஸ்

தயாரிப்பு :- டிரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 என்டர்டெயின்மென்ட்.

ரேட்டிங் :- 4.5 / 5.

உலகத்தில் தலை சிறந்த ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனை அவரை தேசத்துரோகி என்ற பட்டத்தை உருவாக்கி, அதற்கான காரணத்தை பொய் புகாரை ஜோடிதது அவருடைய வாழ்க்கையும் மற்றும் குடும்பத்தையும் சீரழிக்கும் கதை தான் ராக்கெட்ரி.

உலகத்தில் தலை சிறந்த ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த உண்மையை கலந்து திரைப்படமாக்கியிருக்கிறார் நடிகரான இயக்குநர் மாதவன்.

இந்த ராக்கெட்ரி என்ற சிறந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த திரைப்பட இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் மாதவன்.

உலகத்தில் தலை சிறந்த ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் உண்மை கதையை நம்பி தனது நடிப்பு மற்றும் இயக்கத்தையும் நம்பி உலகத்தில் தலை சிறந்த ராக்கெட் விஞ்ஞானி நம்பி நம்பிநாராயணனாக தன்னை வருத்தி மாற்றிக் கொண்டிருக்கிறார் ஆர். மாதவன்.

1994ஆம் வருடம் வேறு நாட்டிற்கு நமது நாட்டு ராக்கெட் ரகசியங்களை வேறு நாட்டிற்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கேரள காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் நம்பி நாராயணன்.

50 நாட்களுக்கு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து பிறகு சிறையில் இருந்து வெளியில் வந்தாலும் நான்கு வருட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 1998ஆம் வருடம்தான் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பல விதமான சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்த உலகத்தில் தலை சிறந்த ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்தான் இந்த ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’.

இந்திய விஞ்ஞானி மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரியாக பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி நம்பி விளைவு திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்கள் இயக்குனர் ஆர்.மாதவன்.

ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதிகமாக ஆர்வம் கொண்ட நம்பி நாரயணன் உலக புகழ் பெற்ற அமெரிக்கா பல்கலைகழகத்தில் ராக்கெட் தொடர்பான ஆராய்ச்சியை படித்து முடிக்கிறார்.

அவருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவில் பணிபுரிய அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

அதை மறுத்து இந்தியா திரும்பி இஸ்ரோவில் இணைந்து இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பத்திற்காக பணியாற்றுகிறார்.

இப்படி இருக்கும் நிலையில் நம்பி நாராயணன் மீது தேச துரோக வழக்கு பாய்கிறது.

கேரளா காவல்துறை நம்பி நாராயணனை கைது செய்கிறது.

நம்பி நாராயணன் மீது தேச துரோக வழக்கு போடப்பட்ட வழக்கு இருந்து நம்பி நாராயணன் நிரபராதியாக வெளியே வந்தாரா? இல்லையா?
இறுதியில் நம்பி நாராயணன் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் இந்த ராக்கெட்ரி நம்பி விளைவு திரைப்படத்தின் மீதிக்கதை

உலகத்தில் தலை சிறந்த ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனை
கதாபாத்திரத்தில் கதாநாயகன் மாதவன் நடித்துள்ளார்.

இந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்று சொல்வதை விட அந்த நம்பி நாராயணன் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு தோற்றத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் கதாநாயகன் மாதவன்.

அதிலும் வயதான தோற்றத்தில் பார்க்கும் போது இருவருக்கும் வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அப்படியே மாறியிருக்கிறார் மாதவன்.

வெள்ளை முடி தாடி, வெளியில் தெரியும் தொப்பை, வசன உச்சரிப்பு அவருடைய பாடி லாங்குவேஜ் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் கதாநாயகன் மாதவன்.

கதாநாயகன் மாதவனுக்கு
மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்ரன் ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.

ஒரு காட்சியில் யாரும் எதிர்ப்பார்த்திராத விதத்தில் சிம்ரன் நடிக்கும் காட்சி மனதை உருக வைத்து விட்டது.

மனமுடைந்துபோவது, அவமானங்களை எதிர்கொள்வது என நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகன் மாதவனின் மனைவியாக சில காட்சிகளில் மட்டுமே வரும் சிம்ரன்.

கதாநாயகன் மாதவன் கதாநாயகி சிம்ரன், ரவி ராகவேந்தர் ஜெகன், மிஷா கோஷல் இவர்கள் மட்டுமே நமக்கு அதிகம் தெரிந்த முகங்கள்.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவருக்கும் புதுமுகங்களாக இருக்கிறார்கள்.

இருப்பினும் ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

நம்பி நாராயணன் கதாபாத்திரத்தை பேட்டி எடுப்பவராக சூர்யா நடித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியிலிருந்துதான் காட்சிகள் பிளாஷ்பேக்காக நகர்கின்றன.

சில நிமிடங்களே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் சூர்யா.

சாம் சிஎஸ் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது.

உணர்வு பூர்வமான பல காட்சிகளுக்கு உயிரோட்டமான இசையைத் தந்திருக்கிறார்.

சிரிஷா ராய் ஒளிப்பதிவு அந்தக் காலகட்டங்களை இயல்பு மாறாமல் பதிவு செய்திருக்கிறது.

இயக்குனர் மற்றும் நடிகர் மாதவனின் இந்த முயற்சிக்கு சல்யூட் அடிக்கலாம்.

முதல் பாதியில் ராக்கெட் தொழில்நுட்பம், அறிவியல் என திரைக்கதை நகர்வதால் அதிகம் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

இரண்டாம் பாதியில் நம்பி நாராயணின் குடும்ப வாழ்க்கையை படமாக்கி இருப்பது மிகவும் சிறப்பு.

சென்டிமென்டாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டாம் பாதி ரசிகர்களை சீட்டில் உட்கார வைத்திருக்கிறது.

முதல் பாதியை விட, இரண்டாம் பாதி மனதில் நீங்காத இடம் பிடித்துக் கொண்டது..

இந்த ஆண்டின் தேசிய விருதுகளில் பல விருதுகளை இந்த ராக்கெட்ரி திரைப்படம் கண்டிப்பாக இடம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மொத்தத்தில் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ திரைப்படம் கண்டிப்பாக ரசிக்கலாம்.

error: Content is protected !!