கேப்டன் திரை விமர்சனம் ரேட்டிங் :- 2.5 / 5.

நடிகர் நடிகைகள் :-  ஆர்யா, காவ்யா, ஹரிஷ் உத்தமன், சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, கோகுல், பரத் ராஜ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சக்தி சௌந்தர்ராஜன்.

ஒளிப்பதிவு :- எஸ். யுவா.

படத்தொகுப்பு :- பிரதீப் இ ராகவ்.

இசை :- டி இமான்.

தயாரிப்பு :- தின்க் ஸ்டுடியோஸ், த ஷோ பிபிள்.

ரேட்டிங் :- 2.5 / 5.

இந்த கேப்டன் திரைப்படத்தில் ஆங்கிலத்தில் ‘கிரியேச்சர், மினோட்டர்’ என பெயரிட்டு அழைத்துக் கொள்கிறார்கள்

தமிழில் சொல்ல வேண்டுமென்றால் ‘வினோதப் பிராணி, வினோத மிருகம், வினோத விலங்கு’ என சொல்லலாம்.

தீய சக்திக்கும், நல்ல சக்திக்கும் இடையில் நடக்கும் போராட்டம்தான் இந்த திரைப்படத்தின் கதை.

தீய சக்தி எது என்பதை காலம் காலமாக ஒவ்வொரு இயக்குனரும் அவர்களின் கற்பனைக்கேற்ப கதாபாத்திர வடிவமைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

ஜெயம் ரவி நடிப்பில் மிருதன், டிக் டிக் டிக், ஆர்யா நடிப்பில் டெடி’ ஆகிய சயின்ஸ் பிக்ஷன் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்ததால் அதே வகையிலேயே திரைப்படத்தை இயக்கவும் என இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இந்த ‘கேப்டன்’ திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.

இந்திய ராணுவத்தில் சிறப்புப் பிரிவில் ஒரு குழுவினருக்கு கேப்டனாக கதாநாயகன் ஆர்யா
பணி புரிந்து வருகிறார்.

கதாநாயகன் ஆர்யா குழுவினர் இடம் ஒரு ரகசிய அசைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது.

கதாநாயகன் ஆரியா தலைமையில் உள்ள குழுவினர் மிகவும் திறமைசாலிகள். சீனா, நேபாளம் எல்லைப் பகுதியில் உள்ள ‘செக்டர் 42’ என்ற இடத்தை பொதுமக்களுக்காக திறந்துவிட அரசு முடிவு எடுக்கப்படுகிறது.

நேபாளம் சீனா, திபெத் எல்லைப்பகுதிகள் ஒன்று சேரும் பகுதியில் மனிதர்கள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதியில் மனிதர்கள் வசிக்கக்கூடிய இடமாக மாற்ற, முதற்கட்ட நடவடிக்கையை எடுக்க அந்த வனப்பகுதிக்குள் கேப்டன் கதாநாயகன் ஆர்யா தலைமையில் உள்ள
குழுவினர்கள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதியில்
அனுப்பப்படுகிறார்கள்.

ஆனால் இதற்கு முன் அங்கு சென்ற ராணுவத்தினர் குழுவினர் யாரும் உயிரோடு திரும்பியதில்லை.

இந்த நிலையில்தான் கதாநாயகன் ஆர்யா தலைமையில ஒரு குழுவினர் அங்கு செல்கிறது.

கதாநாயகன் ஆர்யா தலைமையில சென்ற குழுவினர் அனைவரும் திரும்பி வந்தார்களா? வரவில்லையா? என்பதுதான் இநத கேப்டன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கேப்டன் திரைப்படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடித்திருக்கிறார்.

கேப்டன்’ வெற்றி செல்வன் கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாகவும் விறைப்பாகவும் நடித்திருக்கிறார் கதாநாயகன் ஆர்யா.

இந்த கேப்டன் திரைப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ளார்.

கதாநாயகன் ஆர்யாவுக்கு ஜோடி வேண்டும் என்பதற்காக இரண்டே இரண்டு காட்சிகளில் வந்து போகிறார் கதாநாயகி ஐஸ்வர்ய லட்சுமி.

கதாநாயகன் ஆர்யா குழுவில் உள்ளவர்களாக ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல், பரத் ராஜ் நடித்துள்ளனர்.

ஹரிஷ் உத்தமன் தவிர மற்றவர்கள் அனைவரும் திரைப்படம் முழுவதும் வருகிறார்கள்.

மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிக் குழு தலைவி ஆக சிம்ரன் வருகிறார்.

இசையமைப்பாளர் டி.இமான் பின்னணி இசை பரவாயில்லை.

திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து இரண்டு பாடல்களை இடையே தேவையில்லாமல் சொருகி இருக்கிறார்கள்

காட்டைச் சுற்றிச் சுற்றி வித வித கோணங்களில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் யுவாவின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது.

பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு நமக்கு ஏற்றவாறு அமைத்து இருக்கிறார்.

அந்த வினோத மிருகத்தின் தோற்றம், வடிவமும் மிரட்டல்தான்.

ஆனால், மற்ற காட்சிகள் அனைத்தும் சுமார்.

திரைக்கதை படத்தின் மிக பெரிய மைனஸ் பாயின்ட்.

குழந்தைகளுக்கு பிடித்தமான திரைப்படம் கேப்டன்.

மொத்தத்தில் ‘கேப்டன்’ திரைப்படம் வீரியம் குறைவு.