கோப்ரா திரை விமர்சனம் ரேட்டிங் :- 4.25 / 5.

நடிகர் நடிகைகள் :-  விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், ரோஷன் மேத்யூ, கே எஸ் ரவிக்குமார், ஆனந்த் ராஜ், ரோபோ சங்கர், ஜான் விஜய், மீனாட்சி, மிருணாளினி ரவி, பூவையார், ரனீஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அஜய் ஞானமுத்து.

ஒளிப்பதிவு :- ஹரிஷ் கண்ணன்.

படத்தொகுப்பு :- புவன் சீனிவாசன்/ ஜான் ஆபிரகாம்.

இசை :- ஏ ஆர் ரஹ்மான்.

தயாரிப்பு :- செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ.

ரேட்டிங் :- 4.25 / 5.

 

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய 2015 வருடம் நடிகர் அருள்நிதி நடிப்பில் டிமாண்டி காலனி, 2018 வருடம் நடிகை நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள்’ என அடுத்தடுத்து இரண்டு வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மூன்றாவது திரைப்படம் கோப்ரா திரைப்படம் தற்போது விநாயகர் சதுர்த்தி அன்று நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கிறது.

டீசர் மற்றும் டிரைலர் இரண்டையும் பார்த்த பிறகு ஏதோ புதிதாக சொல்லப் போகிறார்கள் என்று சியான் விக்ரம் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள்.

அந்த ரசிகர்கள் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் இயக்குனர் அஜய் ஞானமுத்து முழுமையாக சியான் விக்ரம் ரசிகர்களை பூர்த்தி செய்திருக்கிறார்.

இந்த திரைப்படம் தொடங்கும் போது சில பல வெளிநாடுகளைக் காட்டி ஸ்காட்லாந்து நாட்டு இளவரசரைக் கொல்ல செய்ய ஆப்பிரிக்க பாதிரியார் தோற்றத்தில் கதாநாயகன் விக்ரம் திரைப்படத்தில் அறிமுகமாகிறார்.

கணக்கு வாத்தியாராக இருக்கும் கதாநாயகன் விக்ரம் ரஷியா பிரான்ஸ் லண்டன் பல வெளிநாட்டுகள் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல இடங்களில் முக்கிய பிரமுகர்களை மிக வித்தியாசமான தோற்றத்தில் சென்று கதாநாயகன் விக்ரம் கொலை செய்கிறார்.

ஸ்காட்லாந்து நாட்டு இளவரசர் கொலை எப்படி நடந்தது என்பதை இன்டர்போல் காவல்துறை அதிகாரியான இர்பான் பதான் விசாரிக்க தொடங்குகிறார்.

கணித முறைப்படி நடத்தப்பட்ட ஸ்காட்லாந்து நாட்டு இளவரசர் கொலையும், அதே முறையில் இந்தியாவில் உள்ள ஒரிசா முதல்வர் ஒருவர் கொல்லப்பட்டதிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என கல்லூரி மாணவியான மீனாட்சி கோவிந்தராஜன் ஒரு ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை எழுதுகிறார்.

அதற்கடுத்து நடக்கும் சில கொலை சம்பவங்களை அது பற்றிய தகவல் கிடைத்தால் இன்டர்போல் காவல்துறை அதிகாரியான இர்பான் பதான் இந்தியா வருகிறார்.

கதாநாயகன் விக்ரம் செய்யும் முக்கியமான உலக தலைவர்கள் கொலைகளுக்கு பின்னணியில் உள்ள கார்ப்பரேட் கம்பெனி முதலாளியான ரோஷன் மாத்யூ இருக்கிறார்.

இந்த சர்வதேச கொலையாளி யார் என்று இன்டர்போல் காவல்துறை அதிகாரியான இர்பான் பதான் கண்டுபிடிக்கிறாரா? கண்டுபிடிக்கவில்லையா?
உலகத் தலைவர்களை கொலை செய்யும் கதாநாயகன் விக்ரமை இன்டர்போல் அதிகாரியான இர்பான் பதான் கண்டுபிடித்தாரா? இல்லையா? கதாநாயகன் விக்ரம் கொலை செய்ய காரணம் என்ன? என்பதுதான் இந்த கோப்ரா திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கோப்ரா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சியான் விக்ரம், நடித்துள்ளார்.

கதாநாயகன் விக்ரம் பல வித்தியாசமான தோற்றங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

ரொமான்ஸ் சென்டிமென்ட் ஆகிய அனைத்து காட்சிகளில் அதிகமாக ஸ்கோர் செய்து இருக்கிறார்.

குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அற்புதமாக நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார் கதாநாயகன் விக்ரம்.

இந்த கோப்ரா திரைப்படத்தில் கதாநாயகியாக ஶ்ரீ நிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

கதாநாயகன் விக்ரமை
துரத்தி துரத்தி காதலித்து அவர் மனதில் மட்டுமில்லாமல் கதாநாயகி ஶ்ரீ நிதி ஷெட்டி ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து இருக்கிறார்.

இந்த கோப்ரா திரைப்படத்தில் கதாநாயகியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜ் துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

ஆராய்ச்சி மாணவியாக மீனாட்சி கோவிந்தராஜன் ஸ்ரீநிதியை விட அதிகக் காட்சிகளில் வருகிறார்.

இளம் வயது கதாநாயகன் விக்ரம் காதலியாக சில காட்சிகளில் வந்து போகிறார் மிருணாளினி ரவி.

மிருணாளினி ரவி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

இன்டர்போல் அதிகாரியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சிறப்பான அறிமுகம்.

அவருக்கு இது முதல் படம் என்று சொன்னால் நம்ப முடியவில்லை.

இன்டர்போல் ஆபிசர் இர்பான் பதான் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் ரோபோ சங்கரின் நடிப்பு மிகவும் பிரமாதமாக இருக்கிறது

ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். குறிப்பாக ஆதிரா பாடல் மற்றும் பின்னணி இசைக்கி சபாஷ் போடலாம்.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் திரைப்படத்திற்கான உழைப்பு சிறப்பாக உள்ளது.

புவன் சீனிவாசன் ஜான் ஆபிரகாம் இவர்களின் படத்தொகுப்பு அருமை

கதாநாயகன் விக்ரமின் நடிப்புத் திறமையை நம்பி முழுமையாக களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

இயக்குனர் அஜய் ஞானமுத்துவின நம்பிக்கையை கதாநாயகன் விக்ரம் வீணடிக்கவில்லை.

விதவிதமான தோற்றங்களில் முழு திரைப்படத்திலும் தனது நடிப்பால் பல காட்சிகளில் கைதட்டல் வாங்குகிறார் .

கதாநாயகன் விக்ரமை வைத்து பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

குறிப்பாக கதாநாயகன் விக்ரமுக்கு பல கெட்டப்புகள் போட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘கோப்ரா’ திரைப்படம் கிங் கோப்ரா.