பொன்னியின் செல்வன் பாகம் -1 திரை விமர்சனம் ரேட்டிங் :- 4.5 / 5.

நடிகர் நடிகைகள் :- விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, ஆர்.சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரஹ்மான், ஆர்.பார்த்திபன், கிஷோர், ரியாஸ்கான், லால் மோகன்ராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபித துலிபால, அஷ்வின்,மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மணிரத்னம்.

ஒளிப்பதிவு :- ரவிவர்மன்.

படத்தொகுப்பு :- ஸ்ரீகர் பிரசாத்.

இசை :- ஏஆர் ரஹ்மான்.

தயாரிப்பு :- லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ்.

ரேட்டிங் :- 4.5 / 5.

பொன்னியின் செல்வன், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய கதையாகும் 1950 – 1955
6 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.

இநத கதைக்கு கிடைத்த மக்கள் வரவேற்பு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே கதையை கல்கி இதழில் தொடராக வெளியிடப்பட்டது.

இதுதவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டு பல பதிப்புக்களைக் கண்டுள்ளது.

கி.பி. 1000-ஆம் ஆண்டு காலத்தில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் கதை எழுதப்பட்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இந்த கதைகள் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என பெயர்கள் சூட்டப்பட்டு ஜந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திரைப்படமாக எடுக்க நினைத்தார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஆங்கில வசனத்தை அறிஞர் அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.

1958 ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படத்தை எடுத்தார்.

அது மாபெரும் வெற்றி பெற்றது.

மன்னர் காலத்து திரைப்படங்களில் வெற்றி வாகை சூடிய புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு அதே காலக்கட்டத்தில் அதே ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

பொன்னியின் செல்வனின் மையக் கதாபாத்திரம் வந்தியத்தேவன் மற்றும் அருள்மொழி வர்மன் இரண்டு கதாபாத்திரங்களையும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிக்க முடிவெடுத்தார்.

அப்போதைய பிரபலங்கள் பத்மினி, சாவித்ரி, வைஜெயந்திமாலா, நம்பியார் என பலரை தேர்வு செய்தார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.

நாடோடி மன்னனின் குழுவே இதிலும் இடம்பெற்றது.

இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக விளம்பரமும் வெளியானது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கால் உடைந்து விபத்தில் சிக்க பொன்னியின் செல்வன் வேலைகள் தடைபட்டன.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திரை வாழ்க்கை மீண்டு வருமா என்கிற கேள்விக்குறி எழுந்த நிலையில் அவர் மீண்டு வந்தபோது வரிசைக்கட்டி நின்ற திரைப்படங்களை முடிக்கும் நிலையில் இருந்ததால் பொன்னியின் செல்வனை
1958 ஆம் வருடம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்க முடியாமல் கைவிட்டார்.

சோழப் பேரரசின் பேரரசரான சுந்தர சோழன் (பிரகாஷ் ராஜ்) ஆதித்த கரிகாலன் (விக்ரம்), அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி), குந்தவை (திரிஷா) என்ற இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

அவரது மூத்த மகன் ஆதித்த கரிகாலன் ( விக்ரம் ) வடக்கில் தங்களது சோழ சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த போர் புரிந்து வருகிறார்.

மகள் குந்தவை (திரிஷா) தனது நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்.

இளைய மகன் அருண்மொழி வர்மன் (ஜெயம்ரவி) இலங்கையில் போர் புரிந்து சோழக் கொடியை அங்கு பறக்க விடுகிறார்.

இந்நிலையில் சுந்தர சோழரிடமிருந்து (பிரகாஷ்ராஜ்)ஆட்சி அதிகாரம் அவரது மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு (விக்ரம்) செல்லக் கூடாது என நிதி அமைச்சர் பழுவேட்டரையர் (சரத்குமார்) சிற்றரசர்களுடன் சேர்ந்து ஆலோசித்து சுந்தர சோழரின் பெரியப்பா மகன் மதுராந்தகனை ( ரகுமான்) சோழ அரசராக நியமிக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

இதனிடையே, பாண்டிய மன்னனைக் கொன்றதால் ஆதித்த கரிகாலனையும், சோழ சாம்ராஜ்ஜியத்தையும் அழிக்க பாண்டிய மன்னனின் படையினர் சபதமெடுக்கிறார்கள்.

பழுவேட்டரையரின் (சரத்குமார்) மனைவியும், ஆதித்த கரிகாலனின் முன்னாள் காதலியுமான நந்தினியும் (ஐஸ்வர்யா ராய்)சோழ சாம்ராஜ்ஜியத்தின் அரியணை மீது ஆசைப்படுகிறார்.

தொடர்ச்சியாக போரில் வெற்றி பெற்று வரும் ஆதித்த கரிகாலன்,( விக்ரம்) அவரின் தந்தையின் ராஜ்ஜியத்தில் பிரச்சனை வர விருப்பதை உணர்ந்து கொண்டு இந்த செய்தியை அவருடைய தந்தைக்கு தெரியப்படுத்த வல்லவராயன் வந்திய தேவனிடம் (கார்த்தி) பொறுப்பை ஒப்படைக்கிறார்.

இது பற்றி அறிந்து தனது தங்கை குந்தவைக்கும், (திரிஷா) அரசருக்கும் சொல்ல வேண்டும் என தனது நண்பன் வந்தியத் தேவனை (கார்த்தி) தூது அனுப்புகிறார் ஆதித்த கரிகாலன் ( விக்ரம்).

சோழ மன்னர் சுந்தர சோழர் (பிரகாஷ் ராஜ்) நோய் வாய்ப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

அவரும் பல வீரர்களை கடந்து யாருக்கும் தெரியாமல் இந்த செய்தியை சுந்தர சோழனுக்கு தெரியப்படுத்த முயற்சிக்கிறார். அச்சமயம் நந்தினியை (ஐஸ்வர்யா ராய்) சந்திக்கிறார்.

வந்தியதேவன் வந்திருக்கும் நோக்கத்தை புரிந்துக் கொண்ட நந்தினி (ஐஸ்வர்யா ராய்).

இதனை பெரிய பழுகுவேட்டையாரிடம் (சரத்குமார்) தெரியப்படுத்துகிறார்.

இதற்கிடையில் சோழ படையில் இருக்கும் பெரிய பழுகுவேட்டையார் (சரத்குமார்), சின்ன பழுகுவேட்டையார் (பார்த்திபன்) மற்றும் சிற்றரசர்கள் தலைமையில் மதுராந்தகணை (ரகுமான்) அரசராக்க முயற்சிப்பதை வந்திய தேவன் கண்டுபிடிக்கிறார்.

இதனை குந்தவையிடம் (திரிஷா) சொல்ல, அருண்மொழி வர்மனை (ஜெயம் ரவி) இங்கு அழைத்துவர வந்திய தேவனிடம் பொறுப்பு ஒப்படைக்கிறார்.

இதனிடையில் பெரிய பழுகுவேட்டையாரும் தந்திரமாக அருண்மொழி வர்மனை வர வழைக்க ஒரு படையை ஏற்பாடு செய்கிறார்.

இறுதியில் அருண்மொழி வர்மனை ( ஜெயம் ரவி) வந்திய தேவன் பத்திரமாக அழைத்து வந்தாரா? இந்த சூழ்ச்சியில் இருந்து சோழ வீரர்கள் எப்படி வெளியே வருகிறார்கள்? பெரிய பழுகுவேட்டையார் (சரத்குமார்) போடும் திட்டம் நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான் பொன்னியின் செல்வன் பாகம்-1
திரைப்படத்தின் மீதிக்கதை.

வந்தியத் தேவனாக கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார்.

அந்த வந்தியத் தேவன்
கதாபாத்திரத்தில் எப்போதுமே ஒரு குறும்புத்தனம் இருக்கும் அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் (கார்த்தி).

நந்தினி (ஐஸ்வர்யா ராய்) சந்திக்கும் காட்சி குந்தவை (திரிஷா) சந்திக்கும் காட்சி, பூங்குழலி (ஐஸ்வர்ய லட்சுமி) சந்திக்கும் காட்சிகளில் உள்ள அந்த காதல் குறும்புத்தனத்தை மிக அருமையாக நடித்திருக்கிறார்.

அவ்வளவு சுவாரசியம். வீரத்திலும் சளைத்தவரில்லை என சண்டையிலும் அசத்துகிறார்.

ஆதித்த கரிகாலனாக கதாபாத்திரத்தில் சியான் விக்ரம் நடித்திருக்கிறார்.

ஆதித்த கரிகாலனாக கதாபாத்திரத்தில்
(விக்ரம்) நெஞ்சு நிமிர்ந்த தேகத்தில் அவரும் சிறப்பு செய்திருக்கிறார்

நந்தினியை (ஐஸ்வர்யா ராய்) காதலித்து ஏமாந்த சோகம், வெறுப்பு என அருமையாக செய்திருக்கிறார்.

வயதான பழுவேட்டரையருக்கு (ஐஸ்வர்யா ராய்)மனைவியாக முன்னாள் காதலி தஞ்சையில் இருப்பதால் அங்கு வரவே மாட்டேன் என கோபப்படுகிறார்.

காதல் தவிப்பையும், காதலி மீதான வெறுப்பையும், எதிரிகளை வீழ்த்தும் வீரத்திலும் சியான் விக்ரமின் நடிப்பு அபாரம்.

அருண்மொழி வர்மனாக கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார்.

திரைப்படத்தில் அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) இடைவேளைக்குப் பின்பே வருகிறார்.

அதன்பின் அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) சுற்றித்தான் கதை நகர்கிறது.

இந்த முதல் பாகத்தில் அவரது வீரமும், தந்தை மீதும், நாடு மீதும் உள்ள பாசமும் காட்டப்பட்டுள்ளது.

இரண்டாம் பாகத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரம்தான் (ஜெயம் ரவி) திரைப்படம் முழுவதும் வருவார்.
வருவார் என்று நினைக்கத் தோன்றுகிறது.

அருண்மொழி வர்மன் கதாபாத்திரம் (ஜெயம் ரவி) ராஜகுமாரன் என்ற சொல்லுக்கேற்ற உடலமைப்பு , தோற்றம் வாள் சண்டை என மிளிர்கிறார்.

இந்த பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைப்படத்தில்
இளவரசி குந்தவை கதாபாத்திரத்தில் (த்ரிஷா) நடித்திருக்கிறார்.

இளவரசி குந்தவை கதாபாத்திரத்தில் (திரிஷா) தங்க பதுமையாக வருகிறார்.

தந்தை, அண்ணன், தம்பி, நாடு, நாட்டு மக்கள் என எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம். எதிரிகளின் சூழ்ச்சியை அறிந்து அதற்கேற்றபடி புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளும் விதம் அருமை.

திரைப்பட அறிவிப்பின் போது குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷாவா என யோசித்தவர்கள் திரைப்படம் பார்த்தபின் அவரைவிட பொருத்தமானவர் யாருமில்லை என கூறுகிறார்கள்.

இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்
நந்தினி கதாபாத்திரத்தில் (ஐஸ்வர்யா ராய்) நடித்துள்ளார்.

நந்தினி கதாபாத்திரத்தில் பேரழகியாக (ஐஸ்வர்யா ராய்) வருகிறார்

சூழ்ச்சியின் மொத்த உருவம் பேரழகி நந்தினி வடிவில் இப்படித்தான் இருக்குமோ என தனது நடிப்பால் நந்தினி ஆக வரும் (ஐஸ்வர்யா ராய்)
வியக்க வைக்கிறார்.

தன்னை விட வயதில் அதிகமான பழுவேட்டரையரை (சரத்குமார்) திருமணம் செய்து கொண்டவர் நந்தினி ஆக வரும் (ஐஸ்வர்யா ராய்).

பழுவேட்டரையராக (சரத்குமார்) தனது அழகால் அவரை அடிமையாக்கி, தனக்கு வேண்டியவற்றை சாதித்துக் கொள்ளும் சூழ்ச்சிக்காரி. நந்தினி ஆக வரும் (ஐஸ்வர்யா ராய்).

நந்தினி ஆக வரும் (ஐஸ்வர்யா ராய்) குந்தவை (திரிஷா) சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் நாவலில் எழுதப்பட்ட விதத்திற்கு அப்படியே உயிர் கொடுத்திருக்கிறது.

பெரிய பழுவேட்டரையராக (சரத்குமார்) சின்ன பழுவேட்டரையராக(பார்த்திபன்)
சோழ அரசுடன் இருந்து சதிகாரர்களுக்குத் துணை புரியும் வில்லன்கள்.

சுந்தர சோழராக (பிரகாஷ்ராஜ்) ஒற்றனாக வைணவத்தின் பெருமை பேசும் ஆழ்வார்க்கடியானாக (ஜெயராம்) பார்த்திபேந்திர பல்லவனாக (விக்ரம் பிரபு) பெரிய வேளார் ஆக (பிரபு) பாண்டிய படையின் தலைவனாக (கிஷோர்) மதுராந்தகன் ஆக (ரகுமான்), பூங்குழலி ஆக (ஐஸ்வர்ய லட்சுமி), அருண் மொழி வர்மனைக் காதலிக்கும் கொடும்பாளூர் இளவரசி வானதி ஆக (சோபிதா துலிபாலா), சேந்தன் அமுதன் ஆக (அஷ்வின்) என மற்ற கதாபாத்திரங்களுக்கு தேர்வும் அருமையாக உள்ளது.

அனைத்து கதாபாத்திரங்களும் சரி நடிப்பும் சரி மிகவும் பொருத்தமாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

காட்சியமைப்பின் மூலம் அனைவரையும் அந்த காலக்கட்டத்திற்கே கொண்டு செல்கிறது.

திரைப்படம் தொடங்கி சிறிது நேரத்தில் குதிரையில் அமர்ந்து கொண்டு விக்ரம் வசனம் பேசும் காட்சியை 360 டிகிரியில் காட்சிப்படுத்தியுள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திரைப்படத்தின் ஒளிப்பதிவு ரவிவர்மன் ஓவியம் போல இருப்பதற்கான காரணம் திரைப்படம் முடிந்த பிறகு தான் டைட்டில் கார்டில் தெரிந்தது
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் என்று.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் நீரோட்டத்தில் பயணிக்க வைக்கிறது.

பல இடங்களில் இவரின் பின்னணி இசை திரைப்படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கமாகவே தன்னை அறிமுகப்படுத்திய குருநாதர் திரைப்படத்திற்கு சிறப்பு செய்வார் இதில் பல மடங்கு யோசித்து புதுப்புது ஓசைகள் மூலம் குரு வணக்கம் செலுத்தியிருக்கிறார்.

கலை இயக்கம் திரு.தோட்டாதரணி பிரம்மாண்டமான அரங்குகள் , கால பொருட்கள் உட்பட கலை என்று தெரியாதவாறு செய்துள்ளார்.

இறுதியாக இயக்குனர் பல ஆளுமைகள் எடுக்க நினைத்து தவறவிட்டதை இயக்குனர் மணிரத்னம் செய்திருப்பது.

தமிழ் திரைப்பட உலகிற்கு மிகப்பெரிய பெருமையே சேர்த்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

வரலாற்று திரைப்படங்கள் எடுப்பது அவ்வளவு எளிதல்ல அதுவும் பல பிரபலங்களை சேர்த்து ( அவர் கேட்டால் நட்சத்திரங்கள் மலர்ச்சியுடன் வந்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்) அவர் தந்திருப்பது.

ஒரு அழகான நிகழ்வு
வரலாற்று திரைப்படம் என்றாலே ” மனோகரா கால வசனங்கள் நினைவில் வரும் ,
அதை இக்காலத்திற்கேற்ப கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

இயக்குனர் மணி ‘ யான வசனங்களை ‘ ரத்ன ‘ மாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

மொத்தத்தில் இநத பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைப்படம் ஒரு காவியம் மட்டும் அல்ல ஒரு தமிழனின் வெற்றி.

error: Content is protected !!