அனைத்து காட்சிகள் ஹவுஸ்புல் “பொன்னியின் செல்வன் – பாகம் 1” திரைப்படத்தின் முன்பதிவில் மிகப்பெரிய சாதனை!!

சென்னை 27 செப்டம்பர் 2022 அனைத்து காட்சிகள் ஹவுஸ்புல் “பொன்னியின் செல்வன் – பாகம் 1” திரைப்படத்தின் முன்பதிவில் மிகப்பெரிய சாதனை!!

இந்திய திரைப்பட உலகமே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பிரமாண்ட திரைப்படமான “பொன்னியின் செல்வன் – பாகம் 1” வரும் 30 – செப்டம்பர் – 2022 அன்று உலகம் முழுவதும் பல்லாயிரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

லைகா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மிகப்பெரிய பொருட்ச் செலவில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த “பொன்னியின் செல்வன் – பாகம் 1” திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார்.

நடிகர்கள் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் மற்றும் சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.

“பொன்னியின் செல்வன்-பாகம் 1” திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் திரைப்படத்தின்  மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கிடையே அதிகரித்துள்ளது.

இதற்கிடையே திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள படக்குழுவினர் சென்னை மட்டும் இன்றி பெங்களூர், மும்பை, ஐதராபாத், டெல்லி என இந்தியா முழுவதும் சுற்று ரசிகர்களை சந்தித்து வருவதால், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, திரைப்படம் பற்றிய புகைப் படங்கள் மற்றும் தகவல்கள் சோசியல் மீடியாவில் தற்போது டிரெண்டிங்கிள் உள்ளது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

சென்னையில் அதிகாலை 4.30 மணி சிறப்பு காட்சிகள் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல்லாகியுள்ளது.

மேலும், காலை 8 மணி காட்சிகளும் ஹவுஸ்புல்லாகி வருவதால், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முன்பதிவில் “பொன்னியின் செல்வன் – பாகம் 1” திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது