பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைப்படத்தால் “நானே வருவேன்” திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.!!!
சென்னை 02 அக்டோபர் 2022 பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைப்படத்தால் “நானே வருவேன்” திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.!!!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் பாகம்- 1 திரைப்படம் தற்போது தமிழக மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
பொன்னியின் செல்வன் பாகம்- 1 திரைப்படம் திரையிடப்பட்ட அத்தனை திரையரங்குகளிலும் அலை கடலினும் திரண்டு வந்த மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் இந்த பொன்னியின் செல்வன் பாகம்- 1 திரைப்படம் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைப்படத்தை தமிழக மக்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
அனைத்து திரையரங்குகளிலும் பல காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால் இந்த திரைப்படத்தால் சின்ன திரைப்படங்கள் அனைத்தும் அடிபட்டு காணாமல் போய்விட்டது.
ஏனென்றால் எல்லா திரையரங்குகளிலும் இந்த பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “நானே வருவேன்” திரைப்படம் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷின் இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 29ஆம் தேதி இந்த “நானே வருவேன்” திரைப்படம் வெளிவந்தது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைப்படம் வெளிவந்ததால் தொடர்ந்து பல சின்ன திரைப்படங்களும் தங்கள் வெளியிட்டு தேதியை தள்ளி வைத்தது.
ஆனால் “நானே வருவேன்” திரைப்படம் மட்டும் ஏதோ ஒரு தைரியத்தில் பொன்னியின் செல்வன் பாகம் -1 திரைப்படத்திற்கு போட்டியாக வெளிவந்தது.
எப்படி இருந்தாலும் கல்லா கட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இந்த திரைப்படத்தை வெளியீடு செய்தார்.
ஆனால் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வின் எதிர்பார்ப்பு தற்போது ஈடேறவில்லை.
ஏனென்றால் “நானே வருவேன்” திரைப்படத்திற்கு திரையரங்குகள் முதலாளிகள் வரவேற்பு கொடுக்கவில்லை கொடுக்கவும் மறுக்கிறார்கள்.
அந்த அளவுக்கு பொன்னியின் செல்வனின் பாகம்-1 திரைப்படத்தின் ஆதிக்கம் மட்டுமே தற்போது அனைத்து திரையரங்குகளிலும் தலை தூக்கி இருக்கிறது.
இதனால் “நானே வருவேன்” திரைப்படத்தின் பல காட்சிகள் பல திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத “நானே வருவேன்” படக்குழுவினர் அனைவரும் தற்போது கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்த்ததுதான் என்று நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் நிலையை பற்றி தற்போது பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
தேவையில்லாமல் தானாக வந்து தலையை கொடுத்து மாட்டிக் கொண்டோமே என்ற சூழ்நிலையில் தான் தற்போது நானே வருவேன் வடக்குழுவினர் இருக்கின்றனர்.
நடிகர் தனுஷின் ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.