சோசியல் மீடியா என்ற பெயரில் தவறான செய்திகளை பொது மக்களுக்கு பரப்பி வருபவர்களை களையெடுக்க வேண்டும்   தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது!!

சோசியல் மீடியா என்ற பெயரில் தவறான செய்திகளை பொது மக்களுக்கு பரப்பி வருபவர்களை களையெடுக்க வேண்டும்   தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை!!

சென்னை 22 செப்டம்பர் 2023 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் என்.ராமசாமி என முரளி மற்றும் நிர்வாகிகள் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

அதில், தமிழ்த் திரையுலகில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்குவகிப்பது ஊடகத்துறை.

அத்தகைய ஊடகத்துறை தற்போது உள்ள செயல்பட்டுவருவது கலைஞர்களுக்கு சினிமாத் துறையில் பெரிதும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வகையில், சமீபத்திய நிகழ்வுகளான நடிகர் திரு.மாரிமுத்து அவர்களது மறைவிலும், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் நடிகர் திரு.விஜய் ஆண்டனி அவர்களது மகள் மறைவிலும் ஒருசில ஊடககங்கள் நடந்து கொண்டது மிகவும் வருத்தமளிக்கிறது.

சமீபகாலமாக ஒரு சிலர் திரைத்துறைப்பற்றி வரைமுறை இல்லாமல் செய்திகளை பரப்பி வருவதால், அது விஷயமாக தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியனை அழைத்து பேசி இதற்கு ஒரு வரைமுறைப்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளோம்.

இதில், சோசியல் மீடியா என்ற பெயரில் தவறான செய்திகளை மக்களுக்கு பரப்பி வருபவர்களை களையெடுக்க பேச்சுவார்த்தை
நடத்தவுள்ளோம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/moviewingz/status/1705161584925184207?t=ap9BXt7g9daWvTvUuNuEAQ&s=19

error: Content is protected !!