உலகம்மை திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.25/5.
நடிகர் & நடிகைகள் :- கௌரி ஜி கிஷன், மாரிமுத்து, சுந்தர், வெற்றி மித்ரன், அருள்மணி, பிரணவ், காந்தராஜ், பி கே ஆரி, ஆர்.கே கண்ணன், ஜெயந்தி, மாலா, அனிதா, ஜேம்ஸ், எம் கே ஸ்வாமி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- வி. ஜெயப்பிரகாஷ்.
ஒளிப்பதிவு :- கே.வி.மணி.
படத்தொகுப்பு :- சுரேஷ் ஆரஸ்.
இசையமைப்பாளர் :- இசைஞானி இளையராஜா.
தயாரிப்பு நிறுவனம் :- மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி.
தயாரிப்பாளர் :- டாக்டர் வி ஜெயபிரகாஷ்.
ரேட்டிங் :- 3.25/5.
சாதி சனம்’, ‘காதல் F.M.புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ், தமிழ் எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்டு ‘உலகம்மை’ திரைப்படம் மூலம் தனது தடத்தை ஆழமாக பதிக்கவுள்ளார்.
மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இந்த உலகம்மை திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
அந்த ஊரில் பெரிய மனிதராக இருக்கும் மாரிமுத்து, திருமண வயதை கடந்த தனது ஒரே மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதே சமயத்தில் மாப்பிள்ளை வீட்டார் மாரிமத்து வீட்டிற்கு வந்து பெண்ணை பார்க்க மாரிமுத்துவின் நிலத்தில் வேலை பார்க்கும் உலகம்மையை தனது மகளுடன் துணைக்கு போக சொல்லிவிட்டு, அங்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் தனது பெண்ணின் திருமணத்தை நடத்த திட்டமிடுகிறார்.
மாரிமுத்து வீட்டிற்கு பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை உலகம்மைதான் மணப்பெண் என நினைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விடுகிறார்.
தன்னை தான் மாப்பிள்ளை மணப்பெண் என்று நினைத்தார் எனற உண்மை உலகம்மைக்கு தெரிய வருகிறது.
உடனடியாக பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை நேரில் சந்தித்து அனைத்து உண்மைகளையும் குறிப்பிடுகிறார்.
இதனால், மாரிமுத்துவின் மகன் திருமணம் தடைப்பட்டு விடுகிறது.
தன் மகளின் திருமணம் தடை பட்டதற்கு உலகம்மைதான் காரணம், என மாரிமுத்து, உலகம்மையை பழிவாங்கும் நோக்கத்தில் உலகம்மைக்கு எதிராக ஊர் மக்களை திருப்பி விடுவவதோடு, அவருக்கு மறைமுகமாக பல தொல்லைகள் ஊர் மக்கள் மற்றும் மாரிமுத்து
கொடுக்கிறார்கள்.
எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை தைரியமுடன் ஒரு அளாக எதிர்த்து நிற்கும் உலகம்மை, ஆதிக்க குணம் படைத்தவர்களின் தொடர், அக்காலத்து சாதி வெறி கட்டமைப்புகளையும் எப்படி எதிர்கொண்டு தன் பயணத்தை எப்படி தொடர்கிறார், என்பதுதான் இந்த உலகம்மை திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த உலகம்மை திரைப்படத்தில் கௌரி கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளரி கிஷன், உலகம்மை என்ற கதாபாத்திரத்தில் வாழ்வியலை கண் முன்னே நிறுத்திருக்கிறார்.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளரி கிஷன், காதல், கனிவு கோபம் என அனைத்து விதமான உணர்வுகளையும் நடிப்பின் மூலம் மிக இயல்பாக வெளிப்படுத்தி அருமையாக அசத்தியிருக்கிறார்.
ஊரில் உள்ள ஆதிக்கவாதி கதாபாத்திரத்தில் மாரிமுத்து கதர் சட்டை போட்டுக்கொண்டு ஊர் பெரிய மனிதராக வலம் வரும் செயல்கள் அனைத்தும் திரைப்படம் பார்ப்பவர்களை மிகப்பெரிய அளவில் கோபமடைய வைக்கிறது.
எந்தவித பதற்றமும் இல்லாமல் தனது கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக நடிப்பை கொடுத்திருக்கிறார் மாரிமுத்து.
ஜி.எம்.சுந்தர் நெல்லை மாவட்ட தமிழை அருமையாக பேசி கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
உலகம்மையாக நடித்திருக்கும் கபடி கிஷன்னின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் விஜய் பிரகாஷ், தன் நடிப்பின் மூலம் மாயாண்டி கதாபாத்திரத்தை உயிர் கொடுத்திருக்கிறார்.
மாயாண்டி கதாபத்திரம் ரசிகர்களுக்கு பரிதாபம் பட வைத்துவிடுகிறார்.
உலகம்மையின் காதலிக்கும் கதாபாத்திரத்தில் வரும் வெற்றி மித்ரன் குடும்ப கதாபாத்திரம் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மாரிமுத்துவின் வலது கையாக வரும் காந்தராஜ் சிறப்பாக நடித்திருக்கிறார்.
காவல்துறை ஆய்வாளராக வரும் பி கே ஆரி மிகவும் சிறப்பாக பயணித்திருக்கிறார்.
உலகம்மைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கருப்பு சட்டை வாலிபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரணவ், அருள்மணி, ஜேம்ஸ், சாமி, ஜெயந்தி என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, நெல்லை மாவட்ட மக்களாகவே நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.வி.மணி 1970-ம் காலகட்டத்தை கச்சிதமாக நிரைப்படமாக்கியிருப்பதோடு, அந்த காலக்கட்ட மனிதர்களின் வாழ்வியலையும், காட்சிகளாக திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசைஞானி இளையராஜாவின் இசை கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், திரைப்படத்தின் பாடல்கள் இசைஞானியிடம் எதிர்பார்த்தது போல் இல்லாதது மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அளிக்கிறது.
பின்னணி இசையில் மட்டும் திரைப்படத்தை பக்கபலமாக அமைந்திருக்கிறது.
வணிக ரீதியான உலகம்மை திரைப்படம் இல்லை என்றாலும், திரைப்படத்தின் ஆரம்ப காட்சியிலேயே நம்மை கதைக்குள் இழுத்துக் கொண்டு சென்று விட்டார் இயக்குநர் வி. ஜெயப்பிரகாஷ்.
மொத்தத்தில் இந்த ‘உலகம்மை’ திரைப்படம் இரண்டு மணி நேரம் நம்மை கட்டிப்போட்டு விட்டார்கள்.











