தமிழ் திரைப்பட உலகில் உள்ள அனைத்து முண்ணனி நடிகர்களுக்கும் சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தவர் பிண்ணனி குரல் கலைஞர் சிம்ம குரல் தேவன் குமார் காலமானார் !

தமிழ் திரைப்பட உலகில் உள்ள அனைத்து முண்ணனி நடிகர்களுக்கும் சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தவர் பிண்ணனி குரல் கலைஞர் சிம்ம குரல் தேவன் குமார் காலமானார் !

சென்னை 28 மே 2024 பின்னணி குரல் கலைஞரும் நடிகருமான தேவன்குமார் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி மெகா தொடரில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் தேவன்குமார் நடிப்பை தொடங்கியவர்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி,
தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர், போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டு காலம் பின்னணி குரல் கலைஞராகவும் நடிகராகவும் இருந்து வந்த தேவன் குமார் தமிழ் திரைப்பட உலகில் உள்ள அனைத்து முண்ணனி நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகநாயகன் கமல்ஹாசன் அஜீத்குமார் தளபதி விஜய் சிலம்பரசன் டிஆர், தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், அனைத்து முன்னணி கதாநாயகர்கள் அனைவருக்கும் சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்து நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நன்கு பரீட்சமான நண்பர் பல திரைப்படங்களுக்கு அவருக்கும் சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தவர்.

அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு ஏவிஎம் மயானத்தில் நடைபெறுகிறது!

error: Content is protected !!