இன்றைய ராசிபலன்கள் 08/09/2024.

இன்றைய ராசிபலன்கள்.

08-09-2024 ஞாயிற்றுக்கிழமை தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.

தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, ஆவணி 23
நாள் – சம நோக்கு நாள்
பிறை – வளர்பிறை.

திதி

சுக்ல பக்ஷ பஞ்சமி – Sep 07 05:37 PM – Sep 08 07:58 PM

சுக்ல பக்ஷ சஷ்டி – Sep 08 07:58 PM – Sep 09 09:53 PM

நட்சத்திரம்.

ஸ்வாதி – Sep 07 12:34 PM – Sep 08 03:31 PM

விசாகம் – Sep 08 03:31 PM – Sep 09 06:04 PM

கரணம்.

பவம் – Sep 07 05:37 PM – Sep 08 06:51 AM

பாலவம் – Sep 08 06:51 AM – Sep 08 07:58 PM

கௌலவம் – Sep 08 07:58 PM – Sep 09 09:00 AM

யோகம்.

மாஹேந்த்ரம் – Sep 07 11:16 PM – Sep 09 12:04 AM

வைத்ருதி – Sep 09 12:04 AM – Sep 10 12:32 AM

வாரம்.

ஞாயிற்றுக்கிழமை

*சூரியன் மற்றும் சந்திரன் நேரம்*

சூரியோதயம் – 6:14 AM
சூரியஸ்தமம் – 6:20 PM

சந்திரௌதயம் – Sep 08 9:51 AM
சந்திராஸ்தமனம் – Sep 08 9:50 PM

அசுபமான காலம்.

இராகு – 4:49 PM – 6:20 PM
எமகண்டம் – 12:17 PM – 1:48 PM
குளிகை – 3:18 PM – 4:49 PM

துரமுஹுர்த்தம் – 04:43 PM – 05:31 PM

தியாஜ்யம் – 09:43 PM – 11:29 PM

சுபமான காலம்.

அபிஜித் காலம் – 11:53 AM – 12:41 PM

அமிர்த காலம் – 05:37 AM – 07:25 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:38 AM – 05:26 AM

ஆனந்ததி யோகம்.

லம்பம் Upto – 03:31 PM
உற்பாதம்

வாரசூலை.

சூலம் – West
பரிகாரம் – வெல்லம்

ஞாயிறு கிழமை ஹோரை.

காலை

06:00 – 07:00 – சூரி – அசுபம்
07:00 – 08:00 – சுக் – சுபம்
08:00 – 09:00 – புத – சுபம்
09:00 – 10:00 – சந் – சுபம்
10:00 – 11:00 – சனி – அசுபம்
11:00 – 12:00 – குரு – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – செவ் – அசுபம்
01:00 – 02:00 – சூரி – அசுபம்
02:00 – 03:00 – சுக் – சுபம்

மாலை

03:00 – 04:00 – புத – சுபம்
04:00 – 05:00 – சந் – சுபம்
05:00 – 06:00 – சனி – அசுபம்
06:00 – 07:00 – குரு – சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

(08-09-2024) ராசி பலன்கள்

மேஷம்

சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் பொறுமை வேண்டும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையாட்கள் மத்தியில் மதிப்பு மேம்படும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். பதற்றமான சூழல் மறையும். பள்ளிப் பருவ நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : பொறுமை வேண்டும்.
பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கிருத்திகை : சந்திப்புகள் ஏற்படும்.

ரிஷபம்

சக ஊழியர்களால் ஆதரவான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்கள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : லாபம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.

மிதுனம்

உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியாக மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.

கடகம்

அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். விவசாய செயல்களில் பொறுமை வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

புனர்பூசம் : அனுகூலம் ஏற்படும்.
பூசம் : மந்தத்தன்மை விலகும்.
ஆயில்யம் : பொறுமை வேண்டும்.

சிம்மம்

புதிய முயற்சியால் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்கவும். மனதில் சுபகாரிய எண்ணங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். பேச்சுத் திறமையால் சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் அன்பாக இருப்பார்கள். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மகம் : முடிவுகள் கிடைக்கும்.
பூரம் : கவனத்துடன் செயல்படவும்.
உத்திரம் : சாதகமான நாள்.

கன்னி

நண்பர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். இறை பணிகளில் ஆர்வம் ஏற்படும். உணவுகளில் சற்று கவனம் வேண்டும். மனதில் புதிய இலக்குகள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். செலவுகளால் சில நெருக்கடியான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளால் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும்.
அஸ்தம் : இலக்குகள் பிறக்கும்.
சித்திரை : நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.

துலாம்

எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்கவும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். கொடுக்கல், வாங்கலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : பொறுமையை கடைபிடிக்கவும்.
சுவாதி : சிந்தித்துச் செயல்படவும்.
விசாகம் : மனப்பக்குவம் பிறக்கும்.

விருச்சிகம்

வியாபார பணிகளில் போட்டிகள் மேம்படும். தடைகள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வேள்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

விசாகம் : போட்டிகள் மேம்படும்.
அனுஷம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
கேட்டை : கவலைகள் நீங்கும்.

தனுசு

இணையம் சார்ந்த பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். கால்நடை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் கிடைக்கும். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மூலம் : மாற்றமான நாள்.
பூராடம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

மகரம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். காப்பீடு செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : இழுபறிகள் மறையும்.
அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.

கும்பம்

உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகளால் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் விலகும். வாக்குறுதி அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். திடீர் பயணங்களால் சில மாற்றங்கள் ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : பொறுப்புகள் கிடைக்கும்.
சதயம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.

மீனம்

சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்கள் வேண்டும். ஆரோக்கிய செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.
ரேவதி : ஆர்வமின்மை ஏற்படும்.

error: Content is protected !!