வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்ப்பு ஏற்படடுத்தியிருக்கிறது!
வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்ப்பு ஏற்படடுத்தியிருக்கிறது!
சென்னை 17 அக்டோபர் 2024 மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை வாரிக் கொடுக்கத் தயாராக உள்ளது. டாம் ஹார்டி கடைசி முறையாக ஆண்டி- ஹீரோவாக வொனோமில் நடித்துள்ளார்.
‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கூடுதலாக, படத்தின் பரபரப்பான இறுதி டிரெய்லர் பிராந்தியம் முழுவதும் உள்ள 1500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அனைத்து மொழி படங்களுடனும் ஒளிபரப்பானது.
‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ ஆக்ஷன் த்ரில்லர் படமாக ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்க இருக்கிறது.
சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் இந்தியா அக்டோபர் 25, 2024 அன்று இந்தியத் திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி இல் வெளியிடுகிறது.











