வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தில் வெனோமோக டாம் ஹார்டி விடைபெற்றார்!

வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தில் வெனோமோக டாம் ஹார்டி விடைபெற்றார்!
சென்னை  09 அக்டோபர் 2024 மார்வெலின் ஐகானிக் ஆண்டி- ஹீரோ உரிமையில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படம் தான் தனது கடைசிப் படம் என்பதை டாம் ஹார்டி சமீபத்தில் உறுதிப்படுத்தினார்.
இதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தாலும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு,  ஹார்டி வெனோமாக மீண்டும் வருகிறார்.

சோனியின் சூப்பர் ஹீரோ பிரான்சைஸ்களில் வெனோம் பிரான்சைஸ் மிகவும் பிரபலமானது.

மேலும், டாம் ஹார்டியின் எடி ப்ரோக் மற்றும் வெனோம் ரசிகர்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்கள். சமீபத்திய சமூகவலைதளப் பதிவு ஒன்றில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ குறித்து டாம் ஹார்டி உருக்கமானப் பதிவு ஒன்றைப் பகிர்ந்தார்.

ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து அவர் கூறியிருப்பதாவது,

‘கடந்த 7 வருடங்களாக நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி!சோனியுடன் இணைந்து வெனமாக பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவம். நானும் உங்களுக்குப் பிடித்த மற்ற பெரிய நடிகர்களும் இறுதியாக உங்களுக்காகத் திரையில் வருகிறோம். எங்களைப் பார்த்து மகிழ வாருங்கள்! நன்றி!!’ எனத் தெரிவித்துள்ளார்.

மார்வெலின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்றான வெனோமாக டாம் ஹார்டி மீண்டும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸி’ல் வருகிறார்.

எடி மற்றும் வெனோம் இருவரின் உலகங்களும் வேட்டையாடப்பட்டு அழிவுகரமான முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.

இப்படத்தில் டாம் ஹார்டி, சிவெடெல் எஜியோஃபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இஃபான்ஸ், பெக்கி லு, அலன்னா உபாச் மற்றும் ஸ்டீபன் கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹார்டி மற்றும் மார்செல் ஆகியோரின் கதையை அடிப்படையாகக் கொண்டு கெல்லி மார்செல்  திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தை அவி ஆராட், மாட் டோல்மாக், எமி பாஸ்கல், கெல்லி மார்செல், டாம் ஹார்டி மற்றும் ஹட்ச் பார்க்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் இந்தியா, அக்டோபர்25, 2024 அன்று இந்தியத் திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸை’ பிரத்தியேகமாக வெளியிடுகிறது.

ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 3D மற்றும் ஐமேக்ஸ் 3Dயிலும் படம் வெளியாகிறது.