“நீலம் புரொடக்‌ஷன்” இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பு என்றாலே, தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகிவிடும்.

சென்னை : 23 அக்டோபர் 2020

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என இயக்குநர் பா.இரஞ்சித்தின் முந்தைய தயாரிப்புகள் ஏற்படுத்திய அதிர்வுகளே அதற்கு காரணம்.

அந்த வரிசையில், “யாழி பிலிம்ஸ்” தயாரிப்பில் கலையரசன், அஞ்சலி பாட்டீல் நடித்திருக்கும் “குதிரைவால்” படத்தை நீலம் வெளியிடுகிறது என்ற அறிவிப்பு வந்த்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழத் தொடங்கிட்டது.

இந்நிலையில் “குதிரைவால்” படத்தின் டீசர் நேற்று வெளியானது. முற்றிலும் மாறுபட்ட ஜானரில் இருந்த டீசரை பார்த்துவிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இது அரசியல் படமா? அறிவியல் புனைவா? மேஜிக்கல் ரியாலிசம் என்றால் என்ன? என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இதற்கு பதிலளித்த இயக்குநர்கள், “படம் நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும். இது ஒரு வித்தியாசமான முயற்சி. இதற்கு உறுதுணையாக இருக்கும் பா.ரஞ்சித் சாருக்கு நன்றிகள்” என்று கூறினார்கள்.

இத்திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

https://youtu.be/9vIZy9bGE88