இன்றைய ராசிபலன்கள் 01/11/2024.

இன்றைய ராசிபலன்கள் 

01-11-2024 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.

01-11-2024

தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, ஐப்பசி 15
நாள் – சம நோக்கு நாள்
பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ அமாவாசை – Oct 31 03:53 PM – Nov 01 06:16 PM

சுக்ல பக்ஷ பிரதமை – Nov 01 06:16 PM – Nov 02 08:22 PM

நட்சத்திரம்

ஸ்வாதி – Nov 01 12:44 AM – Nov 02 03:31 AM

விசாகம் – Nov 02 03:31 AM – Nov 03 05:58 AM

கரணம்

நாகவம் – Nov 01 05:07 AM – Nov 01 06:17 PM

கிமிஸ்துக்கினம் – Nov 01 06:17 PM – Nov 02 07:22 AM

யோகம்

ப்ரீதி – Oct 31 09:50 AM – Nov 01 10:40 AM

ஆயுஷ்மான் – Nov 01 10:40 AM – Nov 02 11:18 AM

வாரம்

வெள்ளிக்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:12 AM
சூரியஸ்தமம் – 5:54 PM

சந்திரௌதயம் – Nov 01 5:46 AM
சந்திராஸ்தமனம் – Nov 01 5:48 PM

அசுபமான காலம்

இராகு – 10:35 AM – 12:03 PM
எமகண்டம் – 2:59 PM – 4:26 PM
குளிகை – 7:39 AM – 9:07 AM

துரமுஹுர்த்தம் – 08:32 AM – 09:19 AM, 12:26 PM – 01:13 PM

தியாஜ்யம் – 06:59 AM – 08:46 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:39 AM – 12:26 PM

அமிர்த காலம் – 05:40 PM – 07:27 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:36 AM – 05:24 AM

ஆனந்ததி யோகம்

கதா Upto – 03:31 AM
மாதங்கம்

வாரசூலை

சூலம் – West
பரிகாரம் – வெல்லம்

வெள்ளிக்கிழமை ஹோரை.

காலை

06:00 – 07:00 – சுக் – சுபம்
07:00 – 08:00 – புத – சுபம்
08:00 – 09:00 – சந் – சுபம்
09:00 – 10:00 – சனி – அசுபம்
10:00 – 11:00 – குரு – சுபம்
11:00 – 12:00 – செவ் – அசுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சூரி – அசுபம்
01:00 – 02:00 – சுக் – சுபம்
02:00 – 03:00 – புத – சுபம்

மாலை

03:00 – 04:00 – சந் – சுபம்
04:00 – 05:00 – சனி – அசுபம்
05:00 – 06:00 – குரு – சுபம்
06:00 – 07:00 – செவ் – அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

01-11-2024 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தன வருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள்.
பரணி : ஆர்வம் அதிகரிக்கும்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில புதிய பயணங்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : முதலீடுகள் மேம்படும்.
ரோகிணி : வாய்ப்புகள் சாதகமாகும்.
மிருகசீரிஷம் : அனுபவங்கள் கிடைக்கும்.

மிதுனம்

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். சிக்கல் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும்.
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.-

கடகம்

புதிய வீடு மற்றும் மனை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் புரிதல் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் அலைச்சல் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூசம் : அலைச்சல் உண்டாகும்.
ஆயில்யம் : ஈடுபாடுகள் அதிகரிக்கும்.

சிம்மம்

குழந்தைகளின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். அண்டை, அயலார் ஆதரவுடன் செயல்படுவார்கள். பத்திரிகை துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கிளிபச்சை நிறம்

மகம் : சேமிப்புகள் குறையும்.
பூரம் : ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திரம் : சிந்தித்துச் செயல்படவும்.

கன்னி

உத்தியோக ரீதியான வெளி வட்டார நட்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். துரிதமான செயல்பாடுகளின் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பேச்சுக்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : நட்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : புரிதல் உண்டாகும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்

உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக்கொள்ளவும். வேலையாட்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.
விசாகம் : ஏற்ற, இறக்கமான நாள்.

விருச்சிகம்

வியாபாரப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில இடமாற்றங்கள் ஏற்படும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். சிந்தனை பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

விசாகம் : சிந்தித்துச் செயல்படவும்.
அனுஷம் : ஆதரவான நாள்.
கேட்டை : முயற்சிகள் கைகூடும்.

தனுசு

பெரியவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய தெளிவினை ஏற்படுத்தும். செய்கின்ற செயல்களில் கவனம் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். அயல்நாட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். கோபம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மூலம் : தெளிவுகள் பிறக்கும்.
பூராடம் : ஆதரவான நாள்.
உத்திராடம் : லாபங்கள் மேம்படும்.

மகரம்

சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தன வருவாயில் இழுபறியான சூழ்நிலை ஏற்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். வாக்குகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். கல்வி கற்கும் திறனில் மாற்றங்கள் ஏற்படும். காது தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : இழுபறியான நாள்.
திருவோணம் : நெருக்கடிகள் குறையும்.
அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்

கும்பம்

பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்க இயலும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். எதிர்ப்பு விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.
சதயம் : பொறுப்புணர்ந்து செயல்படவும்.
பூரட்டாதி : ஆதரவு பெருகும்.

மீனம்

தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார ரீதியான முயற்சிகளில் விவேகம் வேண்டும். மாற்றம் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
ரேவதி : கவனம் வேண்டும்.

நவசக்தி பாரம்பரிய ஜோதிடம். ஜோதிட ஆதித்யா வாஸ்து பிரசன்ன ஜோதிடர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர். T.MUNIRAJAN
+919942285750

error: Content is protected !!