பிரதர் திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, நட்டி நடராஜ், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், பேபி விருத்தி, மாஸ்டர் அஷ்வின், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராஜேஷ்.எம்.

ஒளிப்பதிவாளர் :- விவேகானந்தர் சந்தோஷம்.

படத்தொகுப்பாளர் :- ஆஷிஷ் ஜோசப்.

இசையமைப்பாளர் :- ஹாரிஸ் ஜெயராஜ்.

தயாரிப்பு நிறுவனம் :- ஸ்கிரீன் சீன்ஸ் மிடியா என்டர்டைன்மென்ட்.

தயாரிப்பாளர் :- சுந்தர் ஆறுமுகம்.

ரேட்டிங் :- 2./5

கதாநாயகன் ஜெயம் ரவி சென்னையில் அப்பா, அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார்.

ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்டே இவர் சிறு வயதில் இருந்தே வளர்ந்து வருகிறார்.

கதாநாயகன் ஜெயம் ரவி பேச்சினால் பல பிரச்சனைகள் வருகிறது.

மேலும் அவர் படிக்கும் வக்கீல் படிப்பும் பாதியிலேயே நின்று விடுகிறது.

கதாநாயகன் ஜெயம் ரவி குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும் அவருடைய பேச்சினால் மிகப்பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுகிறது.

இதனால், ஊட்டியில் இருக்கும் தனது மூத்த மகள் பூமிகா வீட்டிற்கு கதாநாயகன் ஜெயம் ரவியை பெற்றோர்கள் அனுப்பி வைக்கின்றனர்.

பூமிகாவும் கதாநாயகன் ஜெயம் ரவிக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக் கொள்வதாக பெற்றோர்களுக்கு சத்தியம் செய்துவிட்டு ஜெயம் ரவியை அழைத்து செல்கிறார்.

கதாநாயகன் ஜெயம் ரவியின் பேச்சினால் நாளடைவில் பூமிகாவின் குடும்பம் சின்ன சின்னா பின்னமாக சிதறுகிறது.

இறுதியில் குடும்பத்தை விட்டு பிரித்து வந்த தனது அக்கா பூமிகாவை அவருடைய குடும்பத்துடன் சேர்த்து வைத்தாரா? பூமிகா வாழ்ந்த குடும்பத்துடன் சேர்த்து வைக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘பிரதர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பிரதர் திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெயம்ரவி நடித்திருக்கிறார்.

மருத்துவமனையில் பவுன்சர், கதாப்பாத்திரம் பி.டி. மாஸ்டர் கதாபாத்திரம் என பல கெட்டப்பில் ஜெயம் ரவி அசத்தி இருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, துறுதுறு இளைஞனாக நடித்து இருக்கிறார்.

தன் காதல், அக்கா பாசம், சென்டிமென்ட் என நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

இந்த பிரதர் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன், நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்து இருக்கும் பிரியங்கா மோகன், அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

கதாநாயகன் ஜெயம் ரவியின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூமிகா கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கவில்லையா என தோன்றுகிறது.

நட்டி நட்ராஜ், மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சரண்யா பொன்வண்ணன் இங்கிலீஷ் பேசி சிரிக்க வைத்து இருக்கிறார்.

தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷின் நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

ராவ் ரமேஷின் நடிப்பின் மூலம் பல காட்சிகளில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் விவேகானந்தர் சந்தோஷம் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை கலர்புல்லாக காண்பித்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக அமைந்துள்ளது

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை சில இடங்களில் அவருடைய பழைய திரைப்படங்களில் உள்ள சாயல் தெரிகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மக்காமிசி பாடல் மட்டுமே ரசிகர்களை ஸதாளம் போட வைக்கிறது.

அக்கா தம்பி பாசத்தை வைத்து மட்டுமே திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் எம்.

காமெடி காட்சிகள் மற்றும் அழுத்தமான காட்சிகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

ஆனால், இந்த பிரதர் திரைப்படத்தில் காமெடி காட்சிகள் பெரியதாக எதுவும் எடுபடவில்லை என்றாலும் சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருந்தால் திரைப்படத்தை ரசித்து இருக்கலாம்.

பழங்காலங்களாக இருக்கும் இந்த கதையை அரைத்த மாவை அரைத்து புளித்துப்போன மாவு ஆன  கதையை இயக்குனர் ராஜேஷ் .எம. இயக்கியிருக்கிறார்.

மொத்தத்தில், – இந்த பிரதர் திரைப்படம் பார்க்க முடியல பிரதர் சின்னத்திரையில் சீரியல் பார்ப்பது போல் உள்ளது.

error: Content is protected !!