நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ‘டெஸ்ட்’ படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் அறிமுகம் !!
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ‘டெஸ்ட்’ படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் அறிமுகம் !!தனது கதாபாத்திரம் பற்றி நயன்தாரா பகிர்ந்து கொண்டதாவது, “குமுதாவின் கனவு ஒரு வீடு, ஒரு குடும்பம் மற்றும் நீடித்த காதல் என்ற எளியதுதான். ஆனால், வாழ்க்கை அவள் எதிர்பார்க்காத விதத்தில் அவளை சோதிக்கிறது. தனது கனவிற்காக போராட அவளைத் தள்ளுகிறது. குமுதாவின் பயணத்தைத் திரையில் கொண்டு வந்திருப்பது எனக்கு எமோஷனலான விஷயம். ரசிகர்களுக்கும் அதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ’டெஸ்ட்’ என்பது காதல், மீண்டு வருவது மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கதை. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘டெஸ்ட்’ படத்தை ரசிகர்கள் பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.
குமுதாவின் கனவுகள் நிஜமாகுமா அல்லது எட்டாத விஷயமாகவே இருக்குமா என்பதைத் தெரிந்து கொள்ள நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 4 பாருங்கள்!
நடிகர்கள்: ஆர். மாதவன், மீரா ஜாஸ்மின், நயன்தாரா, சித்தார்த்
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: எஸ். சஷிகாந்த்,
தயாரிப்பாளர்: சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் (YNOT ஸ்டுடியோஸ் புரொடக்ஷன்)
நெட்ஃபிலிக்ஸ் பற்றி:
நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.
Related posts:
நடிகை’நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ அவரது பிறந்தநாளான நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!
வெளியான மூன்றே வாரங்களில் ஓடிடி தளத்தில் முதலிடத்தில் இருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம்!
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ’அஸ்வின்ஸ்’ அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகிறது!
’சிங்க்’ திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.!!
நடிகை நயன்தாராவின் அடுத்த படம் குறித்த தகவல்
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘கில்லர் சூப்’ இயக்குநர் அபிஷேக் சௌபே பற்றி நடிகர் நாசர்!
நடிகை நயன்தாரா நடித்த “O2” திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது!!
நாளை முதல் ஓடிடி தளத்தில் வெளியாகும் நடிகர் சிலம்பரசன் டிஆரின் திரைப்படம்.
‘ஒரு நல்ல திரைப்படத்தை ஓடிடி தளத்தில் மக்கள் பெரிதும் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்’ என்கிறார் அப்புக்குட்டி!
RJ பாலாஜியின் வீட்ல விசேஷம் திரைப்படம் ஓடிடி தளத்தில் 2 கோடி பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது !

