மாமன்னன்’ வெற்றிக்கு பிறகு நடிகர் பஹத் பாசில் – வடிவேலு இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது !
மாமன்னன்’ வெற்றிக்கு பிறகு நடிகர் பஹத் பாசில் – வடிவேலு இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது !சென்னை 01 ஏப்ரல் 2025 நடிகர்கள் பஹத் பாசில் – வடிவேலு இருவரும் இணைந்திருக்கும் ‘மாரீசன்’ எனும் திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ எனும் திரைப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.
டிராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98 ஆவது திரைப்படம் இது என்பதும், ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு – பகத் பாசில் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் இது என்பதும், இதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாமன்னன் திரைப்படத்தின் படக்குழுவினருடன் நடிகர் வடிவேலு! பிறந்தநாள் கொண்டாடினர்!
இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மாமன்னன்’ திரைப்படத்திற்காக ‘வைகைப் புயல்’ வடிவேலு பாடிய பாடல்.!!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மாமன்னன் திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!!
மாமன்னன் திரைபபடத்தின் இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்.!!
மாமன்னன் பட குழுவினர் அனைவரையும் பாராட்டிய இயக்குநர் பா. ரஞ்சித்.!!
ஜூலை 15-ல் வெளியாகும் பஹத் பாசிலும் கவுதம் மேனனும் நேருக்கு நேர் மோதும் ‘நிலை மறந்தவன்’!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “மாமன்னன்” திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியானது.!!
மாமன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருவதால் இயக்குனருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!!
இசையமைப்பாளர் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ஐங்கரன் திரைப்படம் நீண்ட தடைகளுக்கு பிறகு வெளியாகிறது.!
இரு மொழிகளில் உருவாகும், நடிகர் ராம் பொதினேனி நடிக்கும், “தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14, பிரமாண்டமாக வெளியாகிறது !

