மாமன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருவதால் இயக்குனருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!!
மாமன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருவதால் இயக்குனருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!!
சென்னை 02 ஜூலை 2023 ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின், மாமன்னனாக வைகைப்புயல் வடிவேலு, பஹத் பாசில், கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ், கௌரவத் தோற்றத்தில் லால் விஜயகுமார், அழகர் பெருமாள் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் கடந்த 29ஆம் தேதி வெளி வந்து அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ திரைப்படம் உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.
ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம், இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு பரிசாக மினி கூப்பர் காரை வழங்கிய நிகழ்வின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவன இணை தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R. அர்ஜுன் துரை, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் இருந்தனர்.











