மாமன்னன் திரைபபடத்தின் இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்.!!

மாமன்னன் திரைபபடத்தின் இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்.!!

சென்னை 05 ஜூலை 2023 ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின், மாமன்னனாக வைகைப்புயல் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ்  லால் விஜயகுமார் அழகர் பெருமாள் கதிரவன் பாலு நடிப்பில்  உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாமன்னன் திரைப்படத்தை பார்த்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாமன்னன் திரைபபடத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்.

மாமன்னன் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பாராட்டி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்…

“மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்”

என  தனது டிவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!