இசையமைப்பாளர் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ஐங்கரன் திரைப்படம் நீண்ட தடைகளுக்கு பிறகு வெளியாகிறது.!

சென்னை 30 ஏப்ரல் 2022 இசையமைப்பாளர் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ஐங்கரன் திரைப்படம் நீண்ட தடைகளுக்கு பிறகு வெளியாகிறது.!

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘ஐங்கரன்’ திரைப்படத்தின் வெளியீடு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதர்வா முரளி நடிப்பில் ‘ஈட்டி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் ‘ஐங்கரன்’.

காமன்மேன் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இதில் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக, மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

மேலும், காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்..

இந்த திரைப்படம் சில பொருளாதார சிக்கல், கொரோனா பரவல் உள்ளிட்ட பல காரணங்களால், 3 ஆண்டுகளுக்கு மேலாக திரைக்கு வராமல் முடங்கியது.

இந்த நிலையில் ‘ஐங்கரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வருகிற மே மாதம் 5ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.