23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் டாப் ஸ்டார் பிரஷாந்த், நடிக்கும் “பிரஷாந்த் 55” திரைப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் ஹரி !!
23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் டாப் ஸ்டார் பிரஷாந்த், நடிக்கும் “பிரஷாந்த் 55” திரைப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் ஹரி !!
.
சென்னை 06 ஏப்ரல் 2025 அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகர் டாப் ஸ்டார் பிரஷாந்த், நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக “பிரஷாந்த் 55” என்று பெயரிடப்பட்டுள்ளது.
மிக அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரச மற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த விரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனர் ஹரி இயக்குகிறார்
நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குனர் ஹரி இயக்கிய, அவரது அறிமுகமான முதல் திரைப்படம் ‘தமிழ்’ மிகப் பெரிய வெற்றி அடைந்து வசூலை வாரிக் குவித்தது.
தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே. பட்டி தொட்டி எங்கும், திரை அரங்கில் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி, தமிழ் திரைப்படம் சாதனை படைத்தது.
அதன்பிறகு இயக்குனர் ஹரி, தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்ததோடு, தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை மட்டுமே இயக்கி, தான் ஒரு வெற்றி இயக்குனர் என தனி முத்திரை பதித்தார்.
தமிழ் திரைப்பட உலகில் பல முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் இந்த திரைப்படத்தில், பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கும் எனவும், பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைய உள்ளார்கள் எனவும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
நடிகர் பிரஷாந்த்தின் பிறந்த நாளான இன்று ஏப்ரல் 6, இந்த திரைப்படத்தின் (பிரஷாந்த் 55) அறிவிப்பு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியானது.
“பிரஷாந்த் 55” திரைப்படத்தை இப்படத்தை நடிகர், மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் தியாகராஜன் அவர்கள் ஸ்டார் மூவிஸின் சார்பாக தயாரிக்கிறார்.











