உலகநாயகன் கமல்ஹாசனின் KH234-வது திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.!!!

சென்னை 06 நவம்பர் 2022 உலகநாயகன் கமல்ஹாசனின் KH 234 -வது திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.!!!

உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் KH234-வது திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாக உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

நாயகன் திரைப்படம் வெளிவந்து 35 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 1987-ம் வருடம் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் ‘நாயகன்’. மும்பை ‘தாதா’ குறித்து கதையான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இன்றும் இநத நாயகன் திரைப்படம் குறித்து ரசிகர்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்’திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இதற்கான அடுத்த பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

அதேபோல உலகநாயகன் கமலஹாசன் பொறுத்தவரை அவரது ‘விக்ரம்’ திரைப்படம் ரூபாய்.450 கோடி மேல் வசூலை பாரி குவித்து மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘நாயகன்’ திரைப்படத்திற்கு பிறகு உலக நாயகன் கமலஹாசனும் – இயக்குனர் மணிரத்னமும் இணைவார்களா? இணைய மாட்டார்களா ? என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில் தற்போது இருவரும் இணைவார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், 35 ஆண்டுகளுக்குப்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த KH234-வது திரைப்படத்தை உலகநாயகன் கமலஹாசனின் நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட்ஜெயண்ட் மூவிஸ் எழுந்து தயாரிக்கின்றனர்.

இந்தத் திரைப்படம் KH234 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

நாளை நடிகர் உலக நாயகன் கமலஹாசனின் பிறந்த நாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.