38 வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி  திரைப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் !!

38 வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி  திரைப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் !!

சென்னை 03 செப்டம்பர் 2024 நடிகர் சத்யராஜ் மகள் கொடுத்த முக்கிய அப்பேட் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படம் ‘கூலி’.

இந்தப் கூலி திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்த கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா,  ஆகியோர் நடிக்கின்றனர்.

திரைப்படத்தில் நடிப்பவர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது.

கூலி திரைப்படத்தில் சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் மிஸ்டர் பாரத் திரைப்படத்திற்கு பிறகு சுமார் 38 ஆண்டுகளுக்கு பின்னர் சத்யராஜ் இந்த கூலி திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்.

இந்நிலையில், சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இணையத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது வில்லன் கதாபாத்திரம் குறித்து அப்டேட் கொடுத்தார்.

அதில், அப்பா சத்யராஜ் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

error: Content is protected !!