பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை !

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை !

சென்னை 16 மே 2025 தமிழ் திரைப்பட உலகில் சிவகார்த்திகேயன் ரவி மோகன் மற்றும் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் “பராசக்தி” தனுஷ் நடிப்பில் “இட்லி கடை” சிலம்பரசன் டி ஆர் நடிக்கும் “எSTR49” ஆகிய திரைப்படங்களில் மிகப்பெரிய கதாநாயகர்களை வைத்து திரைப்படம் தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இவர் தற்போது “இதயம் முரளி” என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியும் வருகிறார். இவர் தயாரிக்க தொடங்கிய முதல் திரைப்படம் நடிகர் தனுஷ் நடிப்பில் “இட்லி கடை” திரைப்படம்தான் இவர் திரைப்பட உலகில் தயாரிப்பாளராக தொடங்கும் போது பெரிய கதாநாயகர்களை வைத்து திரைப்படங்கள் தயாரிக்க தொடங்கினார்.இவர் பெரிய கதாநாயக பிள்ளை வைத்து திரைப்படம் தொடங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த நிலையில்தான் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றார்கள்.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பர்.இவருடைய திருமண நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மிக நெருக்கமாக உள்ளார் எனவும் சிலர் கூறுகின்றனர்.

இந்த நிலையில்தான் இன்று காலை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

error: Content is protected !!