“ஜோரா கைய தட்டுங்க” திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- யோகி பாபு, சாந்தி ராவ், ஹரீஷ் பேரடி, கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜாகஷன், நைரா நிஹார், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- வினீஷ் மில்லினியம்.

ஒளிப்பதிவாளர் :- மது அம்பாட் ISC.

படத்தொகுப்பாளர் :- சாபு ஜோசப்.

இசையமைப்பாளர் :- எஸ்.என் அருணகிரி , ஜித்தின் கே ரோஷன்.

தயாரிப்பு நிறுவனம் :- வாமா என்டர்டெயின்மென்ட். ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ்.

தயாரிப்பாளர் :- ஜாகீர் அலி, சரவணா.

ரேட்டிங்:- 1.5./5.

கதாநாயகன் யோகி பாபு ஒரு மேஜிக் நிறுவனராக வேண்டும் என தன் தந்தையிடமிருந்து சிறு வயது முதல் மேஜிக் கற்று வரும் போது அபயகரமான ஒரு மேஜிக்கில் தன் தந்தையை இழந்து விடுகிறார்.

அதன் பின்பு மிகப்பெரிய மேஜிக் மேனாக தன் தந்தையின் ஆத்மாவின் வழிநடத்தலால் மேஜிக் கற்றுக் கொண்டு ஒரு மேஜிக் மேனாக வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் யோகி பாபு ஒரு மேஜிக் மேனாக சரியான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை, கதாநாயகி சாந்தி ராவ் மேஜிக் ஷோ வாய்ப்புகள் பெற்று தர அதனால் பலன் இல்லாமல் போகிறது.

இந்நிலையில் கதாநாயகன் யோகி பாபு குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் இருக்கும் விட்டில் இருக்கும் சில காளி பசங்க கதாநாயகன் யோகி பாபுவிடம் தொடர்ந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கதாநாயகன் யோகி பாபு வழக்கம் புறாவை திருடி சென்றுவிட அதனால் கோபப்படும்

கதாநாயகன் யோகி பாபு அந்த காளி பசங்களிடம் எனது புறாவை என்ன செய்துகள் என கேட்டு சட்டையை பிடித்து தகராறு செய்கிறார்.

அது ஒரு புறம் இருக்க அந்தக் காளி பயில்களில் ஒருவன் அந்த ஊரில் உள்ள 13 வயது ஏழை பெண்ணை கடத்தி சென்று ரவுடிகளோடு சேர்ந்து கற்பழித்துக் கொன்று விடுகிறார்கள்.

இதை ஒரு பக்கம் காவல்துறையினர் கொலை குற்றவாளிகளை விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கதாநாயகன் யோகி பாபு அந்த குற்றவாளிகளை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்.

குற்றவாளிகளை கதாநாயகன் யோகி பாபு பழி வாங்கினாரா? பழிவாங்கவில்லையா? என்பதுதான் இந்த “ஜோரா கையா தட்டுங்க” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த “ஜோரா கையா தட்டுங்க” திரைப்படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடித்திருக்கிறார்.

மேஜிக் மேன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு தன்னுடைய கதாபாத்திரத்தில் பொருத்தமாக இருந்தாலும் நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை என்பதுதான் உண்மை.

இந்த “ஜோரா கையா தட்டுங்க” திரைப்படத்தில் நடித்திருக்கும் சாந்தி ராவ், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரீஷ் பேரடி, கதாநாயகன் யோகி பாபுவின் நண்பனாக நடித்திருக்கும் கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜாகஷன், நைரா நிஹார், அனைவரும் சிறப்பாக நடித்திருந்தாலும் இந்த திரைப்படத்தில் கதை மற்றும் திரைக்கதையிலும் ஒரு மேஜிக் இல்லை என்பது உண்மை.

ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் எஸ்.என் அருணகிரி , ஜித்தின் கே ரோஷன். இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

மேஜிக் பற்றிய கதையில் திரைக்கதை வசனத்தில் ஒரு மேஜிகே இருக்க வேண்டாமா? கதையை சொல்லாவிட்டால் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் இருந்து கைதட்டல் கிடைக்கவே கிடைக்காது என்பது படக்குழுவுக்குத் தெரிந்தே இருக்கிறது .அந்த நேர்மை பிடிச்சிருக்கு.

மொத்தத்தில், இந்த ஜோரா கையா தட்டுங்க திரைப்படம்???

error: Content is protected !!