“மாமன்” திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லெட்சுமி, ஸ்வாசிகா, பாபா பாஸ்கர், மாஸ்டர். பிரகீத் சிவன், பால சரவணன், ஜெய பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பிரசாந்த் பாண்டியராஜ்.
ஒளிப்பதிவாளர் :- தினேஷ் புருஷோத்தமன்.
படத்தொகுப்பாளர் :- கணேஷ் சிவா.
இசையமைப்பாளர் :- ஹேஷாம் அப்துல் வஹாப்.
தயாரிப்பு நிறுவனம் :- லார்க் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- கே.குமார்
ரேட்டிங் :- 3.75./5.
தமிழ் திரைப்பட உலகில் காமெடி நடிகராக இருந்து சூரி கதை நாயகனாக உயர்ந்து விடுதலை, விடுதலை 2, கருடன், கொட்டுக்காளி, ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு நடித்திருக்கும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பைக் கொட்டிக் குவித்திருக்கும் திரைப்படம்தான் மாமன்.
இதற்கு முந்தைய திரைப்படங்களைவிட நடிகர் சூரியின் நடிப்பில் தெளிவும் கூர்ந்த அனுபவமும் அருமையான நடிப்பு அழுகை, கோபம், காதல், பாசம் என மாறுபட்ட உணர்வுகளை மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகிறார்.
தமிழ் திரைப்பட உலகில் விலகிப்போன குடும்ப உறவுகளின் உன்னதம் பேசும் நீண்ட இடைவெளிக்கு பின் அற்புதமான ஒரு அழகான குடும்ப காவியம் என்று சொல்லலாம் உறவின் தனித்துவத்தை மகத்துவத்தை மிக அற்புதமாக இந்த மாமன் திரைப்படத்தில் அற்புதமான ஒரு வாழ்வியலை மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்.
கதாநாயகன் சூரி, தனது அக்கா சுவாஷிகா மீது அளவு கடந்த அன்பாக இருக்கிறார்.
கதாநாயகன் சூரியின் அக்கா சுவாசிகாவுக்கு திருமணம் நடந்து பந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் காத்திருந்த சுவாசிகாவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது.
கதாநாயகன் சூரி அக்கா சுவாசிகாவுக்கு பிறந்த ஆண் குழந்தையை தாயைப் போல அனைத்து பணிவிடைகளும் செய்து சீராட்டி வளர்க்கிறார்
கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகன் சூரியின் அக்கா பிரசவம் பார்த்து அந்த மருத்துவமனை டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகன் சூரிக்கு காதல் மலருகிறது அந்தக் காதல் திருமணத்தில் சென்று முடிகிறது.
கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகன் சூரியின் இல்லற வாழ்க்கையில் அக்கா சுவாசிகாவின் மகன் மாஸ்டர். பிரகீத் சிவன் முதல் இரவில் இருந்து ஆரம்பித்த பிரச்சனை இல்லற வாழ்க்கையில் அக்கா மகன் பாசம் இடையூறாக அமைகிறது.
கதாநாயகன் சூரியின் அக்கா மகன் மாஸ்டர். பிரகீத் சிவன் கதாநாயகன் சூரி கதாநாயகி அக்ஷயா லட்சுமி இல்லற வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டு இருவரும் புரிகிறார்கள்.
அதனால் இரு குடும்பங்களுக்கு இடையே மிகப்பெரிய அளவில் ஏற்படும் மனக்கசப்புகளும் சிக்கல்களும் பிரச்சனைகள் தீர்ந்ததா? தீரவில்லையா? கதாநாயகன் சூரி கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? என்பதுதான் இந்த மாமன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த மாமன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்திருக்கிறார்.
எந்த திரைப்படத்திலும் எப்படியப்பட்ட கதாப்பாத்திரமாக இருந்தாலும் எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், அதற்கு ஏற்ற நடிகனாக தன்னால் உருவெடுக்க முடியும், என்பதை இந்த திரைப்படம் மூலம் தனது நடிப்பினால் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
கதாநாயகனாக கலகலப்பாக வலம் வருவதோடு, மட்டுமல்லாமல் செண்டிமெண்ட் காட்சிகளில் அழுத்தமான நடிப்பை கொடுத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் இதயத்தை கனக்க வைக்கிறார்.
தன் குடும்பம் மற்றும் அக்கா மீது காட்டும் அன்பும், அக்கறையும் போல் தனது மனைவியிடம் காட்டவில்லை என்பதை உணர்ந்து கலங்கும் காட்சியில் தாய்மார்களை கண் கலங்க வைக்கும் கதாநாயகன் சூரிக்கு, இனி தமிழக பெண் ரசிகைகள் அதிகரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மாமன் திரைப்படத்தில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார்.
மருத்துவர் கதாபாத்திரம் கதாநாயகன் சூரியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, அனைத்து மனைவிகளின் அன்பு பாசம் நெருக்கம் அனைத்து எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் தனது நடிப்பின் மூலம் மிகவும் நேர்த்தியாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.
குடும்பம் மீது காட்டும் அக்கறையை காட்டும் ஆண்கள், தங்களது மனைவி மீது காட்டவில்லை என்ற பெரும்பாலான குடும்ப பெண்களின் கோபத்தை தனது நடிப்பின் மூலம் ஆக்ரோஷமான வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார்.
மனைவி மதிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரணின் கதாபாத்திரமும், அவருடைய மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜி சந்திரசேகர் இருவரும் நடிப்பு திரை இருப்பும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.
‘லப்பர் பந்து’ திரைப்படத்திற்குப் பின் மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் சுவாஷிகா
நடிப்பின் மூலம் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை அனைவரையும் கவர்ந்திருக்கிறார்
கதாநாயகன் சூரியின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுவாஷிகா அவருடைய கண்கள் மூலமாகவே நடிப்பின் மூலம் பல உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நடன இயக்குனர் பாபா பாஸ்கர், மாஸ்டர் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு மூலம் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ப்படமாகி மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை அதிகம் சத்தம் இல்லாமல் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவாக சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
திருமண, காது குத்து, சீமந்தம் நிகழ்ச்சி என்று திரைப்படம் முழுவதும் குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் சிறு சிறு பிரச்சனைகளை மிகவும் சுவாரஸ்யமாக, குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்,
மொத்தத்தில், ‘மாமன்’ குடும்பங்கள் கொண்டாடும் சிறந்த திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.











