பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் திடீரென வருமான வரித்துறை சோதனை.

சென்னை 16 செப்டம்பர் 2021 பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் திடீரென வருமான வரித்துறை சோதனை.

பிரபல பாலிவுட் நடிகராக இருந்து வருபவர் சோனு சூட்.

தமிழ் திரைப்பட உலகில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி, கோவில்பட்டி வீரலட்சுமி என பல திரைப்படங்களில் நடித்தவர் ஹிந்தி் நடிகர் சோனு சூட்.

இவர் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

பெரும்பாலும் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களிலேயே நடித்தவர் இவர்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் இவர் செய்த உதவிகள் ஏராளம்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில்  சமூக வலை தளங்கள் வழியாக பலருக்கும் பல உதவிகளைச் செய்து, ரியல் கதாநாயகனாக திகழ்ந்து வலம் வருகிறார் நடிகர் சோனு சூட்.

குறிப்பாக இடம் பெயர் தொழிலாளர்கள் அவதிபட்ட போது பேருந்து விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார்.

உதவி செய்வதற்காகவே தன் சொத்துக்களை 10 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.

மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்பதற்காக ஸ்மார்ட்போன்களை வழங்கினார்.

மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் வைத்தும் கொடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கும் பெரும் உதவி செய்துள்ளார்.

கொரோனா காலத்தில் இவரது சேவையைப் பாராட்டி ஐநா சபை சார்பில் விருது வழங்கப்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் சித்தி பேட் மாவட்டத்தில் உள்ள துப்ப தண்டா என்ற கிராமத்தில் சோனு சூட் சிலை அமைத்து கோயில் கட்டியுள்ளனர்

எனவே பொதுமக்கள் இவரை ரீல் கதாநாயகனாக இல்லாமல் ரியல் கதாநாயகனாக அனைவரும் பார்த்தனர்.

இந்த நிலையில் இவருக்கு சொந்தமான ஆறு இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறையினர் திடீரென சோதனை மேற் கொண்டதால் பாலிவுட் வட்டாரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் சட்ட சபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடிகர் சோனு சூட் களமிறக்கப்படலாம் என தகவல்கள் பரவியது.

மேலும் புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்டத்தின் தூதராக சோனு சூட் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!