‘டிஎன்ஏ’ (DNA) திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :-  அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், சேத்தன், ரித்திவிகா, விஜி சந்திரசேகர், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- நெல்சன் வெங்கடேசன்.

ஒளிப்பதிவாளர் :- பார்த்திபன் D.F டெக்.

படத்தொகுப்பாளர் :- சாபு ஜோசப் வி.ஜே.

இசையமைப்பாளர்கள் :- ஜிப்ரான். சத்ய பிரகாஷ் ஸ்ரீகாந்த் ஹைஹரன் சாஹி சிவா, பிரவின் சைவி, அனல் ஆகாஷ்.

தயாரிப்பு நிறுவனம் :- ஒலிம்பியா மூவிஸ்.

தயாரிப்பாளர் :- அம்பேத்குமார்,
ஜெயந்தி அம்பேத்குமார்.

ரேட்டிங் :- 3.75./5

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா,  திரைப்படங்களை இயக்கி திரைப்பட ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன்,  நடித்துள்ள டிஎன்ஏ (DNA) திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

கதாநாயகன் அதர்வாவிற்கு, முதல் காதல் கை கூடாமல் காதல் தோல்வி அடைந்த காரணத்தினால் குடி பழக்கம் மற்றும் போதை பொருள்களுக்கு அடிமையாகிறார்.

அதன் பிறகு அந்தக் காதல் தோல்வியிலிருந்து மற்றும் குடி பழக்கம் மற்றும் போதைப் பொருள்களில் இருந்து மீண்டு வரும், கதாநாயகன் அதர்வாவிற்கு  சற்று மனநிலம் பாதிக்கப்பட்ட கதாநாயகி நிமிஷா சஜயனை பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்கின்றனர்.

கதாநாயகன் அதர்வாவிற்கு  அழகான ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது.

ஆனால் அந்தக் குழந்தையை  மருத்துவமனையில் உள்ளவர்கள்  கதாநாயகன் அதர்வாவின் குழந்தைக்கு பதில் வேறு ஒரு குழந்தையை கொடுக்க இது என்னுடைய குழந்தை இல்லை, என கண்டுபிடிக்கும் கதாநாயகி நிமிஷா சஜயன், இதைக் கேட்ட கதாநாயகன்
அதர்வா தனது குழந்தையை தேடி செல்கிறார்.

தனது குழந்தையை தேடி திரிந்து கொண்டிருக்கும் கதாநாயகன் அதர்வாவிற்கு பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது.

இறுதியில் கதாநாயகன் அதர்வாவின் குழந்தையை கண்டுபிடித்தாரா?, கண்டு பிடிக்கவில்லையா? ? என்பதுதான் இந்த டிஎன்ஏ (  DNA )
திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த டிஎன்ஏ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அதர்வா நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும்  அதர்வா அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நச்சு என்று மிக அருமையாக பொருந்தியுள்ளார்.

ஆரம்பத்தில் காதல் தோல்விக்கு  பின்னர் குடி பழக்கம் கஞ்சா என போதைப் பொருளுக்கு அடிமையான ஒரு இளைஞராகவும், திருமணத்திற்கு பின்பு தன்னுடைய குழந்தைக்காக போராடும் பாசமான தந்தையாகவும் ஆக்சன் காட்சிகளிலும் மிக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த டிஎன்ஏ திரைப்படத்தில் கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் தான் ஒரு நல்ல நடிகை என்பதை மீண்டும் சிறப்பான நடிப்பை கொடுத்து சிறந்த நடிகை என  நிரூபித்துள்ளார்.

ஆரம்பக் காட்சிகளில் மனநலம் குன்றியவராகவும் பின்பு தன் கணவர் மீது பாசமான மனைவியாகவும் தனது குழந்தையைப் பிரிந்து வாடும் பாசமான தாயாகவும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கண் முன்னே நிற்கிறார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இடைவேளைக்கு பின்  குழந்தையை கொடுத்துவிட்டு வீட்டில் நடக்கும் ஒரு காட்சியில் சிறப்பான நடிப்பை கொடுத்து ரசிகர்களிடம் கைதட்டல்களை பெறுகிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் கதாநாயகன் அதர்வாவின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரமேஷ் திலக், கதாநாயகன் அதர்வாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேத்தன், மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்திகா, கதாநாயகி நிமிஷா சஜயனின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜி சந்திரசேகர், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பார்த்திபனின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் சத்ய பிரகாஷ் ஸ்ரீகாந்த் ஹைஹரன் சாஹி சிவா, பிரவின் சைவி, அனல் ஆகாஷ் இசையில் பாடல்கள் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

இயக்குனர் திரைப்படம் தொடங்கி முதல் 25 நிமிடங்கள் கதை  எங்கு எங்கோ சென்றாலும் அதன் பிறகு ஒரே நேர் கோட்டில்  நகர்கிறது.

தேவையில்லாமல் வரும் ஒரு குத்து பாடலை தவிர்த்திருந்தால் மிக அருமையான திரைப்படமாக அமைந்திருக்கும்.

இந்த வருடம் தமிழ் திரைப்பட உலகில் வெளியான  குடும்பஸ்தன், ட்ராகன், டூரிஸ்ட் பேமிலி சிறந்த திரைப்படங்கள் வரிசையில் டிஎன்ஏ (DNA) திரைப்படமும் மக்கள் விரும்பும் சிறந்த திரைப்படமாக அமைந்திருக்கிறது.

இப்படி ஒரு அருமையான கதையை திரைப்படமாக்க நினைத்து, அதனை சிறப்பான ஒரு திரைக்கதை அமைத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி மிக அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் நெல்சன்  வெங்கடேசன்.

மொத்தத்தில் – இந்த DNA  அறிவியல் மட்டுமல்ல, ஒரு தாயின் உணர்வை அருமையாக கூறும் சிறந்த திரைப்படம்

error: Content is protected !!