எமக்குத் தொழில் ரொமான்ஸ் திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், பகவதி பெருமாள், படவா கோபி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பாலாஜி கேசவன்.
ஒளிப்பதிவாளர் :- கணேஷ் சந்திரா.
படத்தொகுப்பாளர் :- ஐ.ஜெரோம் ஆலன்.
இசையமைப்பாளர் :- நிவாஸ் கே பிரசன்னா.
தயாரிப்பு நிறுவனம் :- டி கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- எம்.திருமலை.
ரேட்டிங்:- 2.5./5.
கதாநாயகன் அசோக் செல்வன் திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக வேலை பார்த்து வருகிறார்.
ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து கொண்டிருக்கும் கதாநாயகி அவந்திகா மிஸ்ரா மீது கதாநாயகன் அசோக் செல்வன் கண்டதும் காதல் வயப்படுகிறார்.
கதாநாயகன் அசோக் செல்வனும் கதாநாயகி அவந்திகா மிஸ்ராவும் ஒரு கட்டத்தில் காதலிக்க தொடங்குகிறார்கள்.
கதாநாயகன் அசோக் செல்வனின் தோழிக்கு கருக்கலைப்பதற்காக மருத்துவமனைக்கு செல்லும் போது கதாநாயகன் அசோக் செல்வனை கதாநாயகி அவந்திகா மிஸ்ரா தப்பாக புரிந்து கொண்டு அவரிடமிருந்து பிரிந்து விடுகிறார்.
கதாநாயகன் அசோக் செல்வன் கதாநாயகி அவந்திகா மிஸ்ரா இருவரும் ஒவ்வொரு முறையும் மீண்டும் சேர்வதற்கான எடுக்கும் முயற்சியில் ஏதோ ஒரு பிரச்சனை வந்து வந்து இவர்களை சேர விடாமல் தடுத்து விடுகிறது.
இறுதியில் கதாநாயகன் அசோக் செல்வன் கதாநாயகி அவந்திகா மிஸ்ரா இருவரையும் சேரவிடாமல் தடுக்கும் பிரச்சனைகளை கதாநாயகன் அசோக்செல்வன் தீர்த்தாரா,? தீர்க்கவில்லையா,? கதாநாயகன் அசோக் செல்வனும் கதாநாயகி அவந்திகா மிஸ்ராவும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா,? காதலில் சேரவில்லையா,? என்பதுதான் இந்த எமக்குத் தொழில் ரொமான்ஸ் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த எமக்குத் தொழில் ரொமான்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் அசோக் செல்வன், வழக்கமான தனது அருமையான நடிப்பு மூலம் தனது ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
கதாநாயகன் அசோக் செல்வன் காதல் காட்சிகளில் மட்டும் இல்லாமல் காமெடி காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார்.
இந்த எமக்குத் தொழில் ரொமான்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக அவந்திகா மிஸ்ரா, நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அவந்திகா மிஸ்ரா, காதல், கவர்ச்சி மற்றும் காமெடி என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.
கதாநாயகன் அசோக் செல்வன் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி, தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகம் பெருமாள், மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படவா கோபி, டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் வழக்கம் போல், கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகனின் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் கொடுத்த வேலையை மிக சிறப்பாக குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, பாடல் காட்சிகளை கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காட்சிப்படுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள், பின்னணி இசை காதல் காட்சிகளுக்கு மட்டும் இன்றி பழைய இளையராஜாவின் பாடல்கள் மூலம் காமெடி காட்சிகளில் சிரிக்கவும் வைத்திருக்கிறது.
இந்த கதை பழைய பாணியிலான காதல் கதை தான் என்றாலும் அதை எந்தவித நெருடலும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்க கூடிய கலகலப்பான பொழுதுபோக்கு படமாகவும் எமக்கு தொழில் ரொமான்ஸ் தலைப்பில் இருக்கும் ரொமான்ஸை காட்டிலும் காமெடிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை மற்றும் காட்சிகளை மிக அருமையாக இயக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன்
மொத்தத்தில், ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ திரைப்படம் கலகலப்பாக இருக்கிறது.