“கட்ஸ்” திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், நான்சி, டெல்லி கணேஷ், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ரங்கராஜ்‌.

ஒளிப்பதிவாளர் :- மனோஜ்.

படத்தொகுப்பாளர் :- ரஞ்சித்.

இசையமைப்பாளர் :- ஜோஸ் ஃபிராங்க்ளின்

தயாரிப்பு நிறுவனம் :- OPRP புரொடக்ஷன்ஸ் பிரிடல் & ஜக்வி.

தயாரிப்பாளர் :- ஜெயபாரதி ரங்கராஜ்.

ரேட்டிங்:- 3./5.

கதாநாயகன் ரங்கராஜ், சிறு வயதில் தன் தாய் மற்றும் தந்தையை இழந்து அதன் பின்னர் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து படித்து காவல்துறை ஆய்வாளராக கதாநாயகன் ரங்கராஜ், அதே ஆசிரமத்தில் இருக்கும் ஒரு அனாதை பெண் கதாநாயகி நான்ஸியை திருமணம் செய்து கொண்டு தன் செல்ல மகள் மற்றும் அசை மனைவியோடு மகிழ்ச்சி நிறைந்த குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் ரங்கராஜ், அடையாளம் தெரியாத ஒரு திருநங்கையை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு காட்டுப்பகுதியில் பாடி
கிடக்கிறார்.

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் யார்? என்று காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் ரங்கராஜ், தனது விசாரணையை தொடங்குகிறார்.

காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் ரங்கராஜ், தனது விசாரணையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது அரசு அதிகாரி விஏஒ திருநங்கை என கண்டுபிடிக்கிறார் கதாநாயகன் ரங்கராஜ்.

அரசு அதிகாரி விஏஒ திருநங்கை கொலை செய்தது யார்? எதற்காக அரசு அதிகாரியை கொடூரமான முறையில் கொலை செய்தார்கள் கொலை செய்த குற்றவாளியை காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் ரங்கராஜ், கண்டுபிடித்தாரா? கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த “கட்ஸ்” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கட்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ரங்கராஜ் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ரங்கராஜ், தமிழ் திரைப்பட உலகிற்கு இவர் புதுமுகம் என்றாலும், எந்த எந்த ஒரு காட்சியிலும் தான் ஒரு புதுமுக நடிகர் என் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கொஞ்சம் கூட கண்டுபிடிக்காத அளவில் தன்னுடைய நடிப்பால் திரைப்பட ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருக்கிறார்.

தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரத்திலும் கதாநாயகன் ரங்கராஜ் நடிப்பின் மூலம் சண்டைக் காட்சிகளிலும் தான் புதுமுக நடிகர் என தெரியாமல் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த கட்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நான்ஸி நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நான்ஸி, கேரளத்து மொழியில் கொஞ்சி பேசுவதும், தனது கணவன் மீது வைத்திருக்கும் காதல் என பல இடங்களில் நன்றாகவே நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

நடிகை ஸ்ருதி நாராயணனுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் ஒரு சில காட்சிகளில் தனது நடிப்பின் மூலம் உச்சத்தை தொட்டிருக்கிறார்.

கதாநாயகன் ரங்கராஜின் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய்தீனா காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டெல்லி கணேஷ், அறந்தாங்கி நிஷா, துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிர்லா போஸ், கதாநாயகன் ரங்கராஜின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீலேகா, வில்லன் கதாபாத்திரத்தில் எடுத்திருக்கும் அனைவரும் மிக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் ஒளிப்பதிவு மூலம் சண்டைக் காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்திய விதம் மிகச் சிறப்பாக உள்ளது.

இசையமைப்பாளர் ஜோஸ் ஃபிராங்க்ளின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மற்றும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

இந்த கட்ஸ் திரைப்படத்தில் கதையை கையில் எடுத்து அருமையான திரைக்கதையை வடிவமைத்து  திருநங்கைகளுக்கான முக்கியத்துவம், விவசாயத்தின் முக்கியத்துவம், ஒரு பெண் எப்படி வீரமாக, இருக்க வேண்டும் ஆணின் கம்பீரம், தாயின் பாசம் என மிக அருமையான திரைப்படமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரங்கராஜ்.

மொத்தத்தில் – கட்ஸ் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் அந்த குறைகளை நிவர்த்தி செய்து இருந்தால் மிகப்பெரிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படமாக அமைந்திருக்கும்.

error: Content is protected !!