“நிறங்கள் முன்று” திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- அதர்வா, ரகுமான், சரத்குமார், துஷ்யந்த், அம்மு அபிராமி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கார்த்திக் நரேன்.
ஒளிப்பதிவாளர் :- டிஜோ டாமி.
படத்தொகுப்பாளர் :- ஸ்ரீஜித் சாரங்.
இசையமைப்பாளர் :- ஜேக்ஸ் பிஜாய்.
தயாரிப்பு நிறுவனம் :- ஐங்கரன் இன்டர்நேஷனல்.
தயாரிப்பாளர் :- கே. கருணாமூர்த்தி.
ரேட்டிங் :- 3.25./5.
கதாநாயகன் அதர்வா திரைப்பட உலகில் எப்படியாவது இயக்குனராக வேண்டும் என முயற்சியில் இருந்து வருகிறார்.
எப்படியாவது ஒரு திரைப்படத்தை இயக்கி விட வேண்டும் என வெறியுடன் ஒவ்வொரு தயாரிப்பாளர்கள் அலுவலகமாக கதை சொல்வதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார்
கதாநாயகன் அதர்வாவின் தந்தை காவல்துறை ஆய்வாளரான சரத்குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் தனியாக ரூம் எடுத்து பேச்சுலராக நண்பர்களுடன் வாழ்ந்து வருகிறார்.
பள்ளி மாணவரான கதாநாயகன் துஷ்யந்த், தன் தாய் தந்தை தனது விருப்பத்திற்கு எதிராக இருப்பதால் அவர்கள் மீது வெறுப்புடனும் கோபத்துடனும் இருப்பதோடு, தன் படிக்கும் பள்ளி ஆசிரியரான ரஹ்மானை நாயகனாக பார்க்கிறார்.
இந்த சமயத்தில், ஆசிரியர் ரஹ்மானின் மகள் கதாநாயகி அம்மு அபிராமி திடீரென்று காணாமல் போய்விடுகிறார்.
ஆசிரியர் ரஹ்மானின் மகள் கதாநாயகி அம்மு அபிராமியை தேடும் பயணத்தில் மனிதர்களின் வெவ்வேறு முகங்கள் தெரிய வருகிறது.
இந்த நிலையில் காணாமல் போன கதாநாயகி அம்மு அபிராமியை கண்டுபிடித்தார்களா? கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தில் கதாநாயகனாக அதர்வா முரளி நடித்திருக்கிறார்.
உதவி இயக்குனர் கதாபாத்திரத்தில் அதர்வா மிக அருமையாக நடித்திருக்கிறார்.
போதையின் மூலம் கற்பனை உலகத்தில் வாழும் இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதர்வா, சர்ச்சையான கதாபத்திரமாக இருந்தாலும் அதை சரியாக செய்திருக்கிறார்.
மாணவர்களுக்கு நாயகனாக இருக்கும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஹ்மான், தனது வேறொரு நிறத்தின் மூலம் அதிர்ச்சியளித்தாலும், சமூகத்தில் நடக்கும் இப்படியா பட்ட அவலங்களுக்கான பின்னணி பற்றி மெடிக்கல் மூலம் யோசிக்க வைக்கிறார்.
நடிகர் சரத்குமார் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பது அவருக்கு புதிதல்ல என்றாலும், காக்கி உடை அணிந்து அவர் ஏற்றிருக்கும் கதாநாயகன் அதர்வாவின் தந்தை கதாபாத்திரத்தை, மிகவும் அசால்டான படிப்பின் மூலம் கைதட்டல் பெறுகிறது.
துஷ்யந்த் ஜெயப்பிரகாஷுக்கு பள்ளி மாணவருக்கான தோற்றம் இல்லை என்றாலும் துடிப்பான இளைஞராக மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
பள்ளி மாணவியாக நடித்திருக்கும் அம்மு அபிராமியும் கொடுத்த வேலையை மிக சிறப்பாக எந்தவித குறையில்லாமல் நடிப்பை கொடுத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் டிஜோ டாமின்
ஒளிப்பதிவு மூலம் இந்த திரைப்படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
ஒரு நாளில் நடக்கும் முன்று கதைக்கு நான் லீனர் முறையில் மிக அருமையாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்,
யூகிக்க முடியாத திருப்பங்கள் மூலம் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக மட்டும் இன்றி மனிதர்களுக்குள் இருக்கும் மற்றொரு நிறத்தின் மூலம் இந்த சமூகத்திற்கு மிக அருமையாக ஒரு நல்ல மெசஜையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்,
மொத்தத்தில், ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் யூகிக்க முடியாத விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது.