போதைப்பொருள் பயன் படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

போதைப்பொருள் பயன் படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

சென்னை 23 ஜூன் 2025 போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் திரையுலகைச் சேர்ந்த வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து நடிகர் ஸ்ரீகாந்திடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடமிருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

பிரசாத் என்பவரிடமிருந்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிராம் போதைப் பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் நாற்பது முறைக்கு மேல் வாங்கிப் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

நாற்பது முறைக்கு மேல் வாங்கி அதற்கான பணப்பரிவர்த்தனை கூகுள் பே மூலம் நடந்துள்ளதாகவும் பெரிய வருகிறது.

இது குறித்து விசாரணை நடத்திய சென்னை – நுங்கம்பாக்கம் காவல்துறையினர், இன்று காலை 8 மணிக்கு, நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை – நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின்போது, அவருடைய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர், நடிகர் ஸ்ரீகாந்த்தை கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த போதைப்பொருள் வழக்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? திரையுலகைச் சேர்ந்தவர்கள் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் வழக்கில் ஏற்கெனவே பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!