சொகுசு கப்பலில் போதை பொருள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை 04 அக்டோபர் 2021 
சொகுசு கப்பலில் போதை பொருள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிந்தி திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதை மருந்து பயன்படுத்திய வழக்கில் போதை மருந்து கடத்தல் பிரிவு காவல்துறையினர்
கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் இருக்கும் போதை மருந்து கடத்தல் பிரிவு காவல்துறையினர் நேற்று மாலை ஆர்யன் கானையும் அவருடன் சேர்த்து 2 பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் மும்பையில் இருந்து கோவா சென்று கொண்டிருந்த கோர்டில்லா என்ற சொகுசு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை நடுக்கடலில் சுற்றி வளைத்த போதை மருந்து கடத்தல் பிரிவு காவல்துறையினர் சோதனையிட்டபோது பலரது பாக்கெட்டுகளிலும், உள்ளாடைகளிலும், மணி பர்ஸ்களிலும் தடை செய்யப்பட்ட கோகெய்ன் உள்ளிட்ட போதை மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக போதை மருந்து கடத்தல் பிரிவு காவல்துறையினர் அவர்களை மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அதன் பின்பு ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான், Arbaz Merchant, Munmun Dhamecha ஆகிய மூவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களிடத்தில் விசாரணை நடத்த வேண்டி போதை மருந்து கடத்தல் பிரிவு காவல்துறையினர் காவலில் கேட்கப்பட்டது.
அதன்படி நாளை வரையிலும் ஒரு நாள் மட்டும் விசாரணைக்கு நீதிபதி அனுமதித்தார்.
இதையடுத்து இவர்கள் மீண்டும் போதை மருந்து கடத்தல் பிரிவு காவல்துறையினர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இன்று இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையில் மேலும் பிடிபட்டிருந்த 4 பேர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
கைதாகியுள்ள அத்தனை பேருமே மும்பையின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்துப் பிள்ளைகள் என்பதால் அரசு, காவல்துறை என்று அனைத்து மட்டத்திலும் பரபரப்பு நிலவுகிறது.
இந்த நேரத்தில் டிவிட்டரில் I Support Sharukhan என்ற ஹேஸ்டேக் துவக்கப்பட்டு பல திரையுலகப் புள்ளிகளும் ஷாரூக்கானுக்கு இந்த விஷயத்தில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.











