“கண்ணப்பா” திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், சரத் குமார், காஜல் அகர்வால், அர்பித் ரங்கா, பிரம்மானந்தம், சப்தகிரி, முகேஷ் ரிஷி, மதுபாலா, ஐஸ்வர்யா பாஸ்கரன், பிரம்மாஜி, தேவராஜ், ரகு பாபு, சிவா பாலாஜி, சம்பத் ராம், லாவி பஜ்னி, ப்ரேஹுர் வகானி, ப்ரீகஹுர் வகானி, சுரேகா வாணி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- முகேஷ் குமார் சிங்.

ஒளிப்பதிவாளர் :- ஷெல்டன் சாவ்.

படத்தொகுப்பாளர் :- அந்தோணி கோன்சால்வேஸ்‌

இசையமைப்பாளர் :- ஸ்டீபன் தேவஸ்ஸி.

தயாரிப்பு நிறுவனம் :- 24 பிரேம்ஸ் ஃபேக்டரி & ஏவிஏ என்டர்டெயின்மென்ட்

தயாரிப்பாளர் :- டாக்டர். எம். மோகன் பாபு.

ரேட்டிங் :- 3.75/5.

கதாநாயகன் விஷ்ணு மஞ்சு. சிறு வயதில் தன்னுடன்  நெருங்கி பழகிய நண்பனை காளி தேவிக்கு நரபலி கொடுப்பதை பார்த்து கடவுள் மீதே கடுப்பாகி கதாநாயகன் விஷ்ணு மஞ்சுக்கு சிறுவயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை இல்லாதவராக வளர்ந்து வருகிறார்.

தனது நண்பனை காளி தேவிக்கு பலி கொடுத்த காரணத்தால் தனது ஊரில் எந்த ஒரு உயிர் கூட இனிமேல் பழியாக கூடாது என முடிவெடுத்து அதற்காக போராடும் கதாநாயகன் விஷ்ணு மஞ்சு. இந்த ஊரில் வீரனாக வாழ்ந்து வருகிறார்.

கடவுள் இல்லவே இல்லை கடவுள் சிலையை வெறும் கல்சிலைதான் எனக் கூறி வாழ்ந்து கொண்டு இருக்கும் கதாநாயகன் விஷ்ணு மஞ்சு எப்படி தீவிரமான சிவ பக்தனாக மாறினான? என்பதுதான் இந்த “கண்ணப்பா” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கண்ணப்பா திரைப்படத்தில் கதையின் நாயகனாக விஷ்ணு மஞ்சு நடித்திருக்கிறார்.

இந்த கண்ணப்பா திரைப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கும் விஷ்ணு மஞ்சு, கதையின் நாயகனாக நடித்து திரைபாபடத்தினை முழுவதும் தான் ஒருவராக  தாங்கி நிற்கிறார்.

நடிகர் விஷ்ணு மஞ்சு தனக்கென உருவாக்கப்பட்ட  அருமையான கதாபாத்திரத்திற்காக நடை மற்றும் உடல் உழைப்பு என மெனக்கெடல் அனைத்தையும் இந்த திரைப்படத்திற்கென்று தன்னை முழுமையாக  அர்ப்பணித்திருக்கிறார்.

இந்த கண்ணப்பா திரைப்படத்தில் கதையின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார்.

நெமலி என்ற சிவனை வழிபடும் கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட குறைவு வைக்காமல் முதல் காட்சியில் இருந்து கடைசி வரை மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

காதல் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை கவர்கிறார்.

பரமசிவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அக்‌ஷய் குமார், பார்வதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காஜல் அகர்வால் மற்றும் சிறப்பு  கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மோகன்லால், பிரபாஸ் சரத்குமார் ஆகியோர் சிறப்பான நடிப்பை  வெளிப்படுத்தி திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்கள்.

இந்த கண்ணப்பா திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் அர்பித் ரங்கா, பிரம்மானந்தம், சப்தகிரி, முகேஷ் ரிஷி, மதுபாலா, ஐஸ்வர்யா பாஸ்கரன், பிரம்மாஜி, தேவராஜ், ரகு பாபு, சிவா பாலாஜி, சம்பத் ராம், லாவி பஜ்னி, ப்ரேஹுர் வகானி, ப்ரீகஹுர் வகானி, சுரேகா வாணி, கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு மூலம் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் பிரமாண்டமாகவும், பாடல் காட்சிகளும் மிகவும் அருமையாக  திரைப்படம் ஆக்கி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் :- ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு கண்ணப்பா திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவஸ்ஸி, இசையில்  பாடல்களாக இருக்கட்டும், பின்னணி இசையாக இருக்கட்டும் இரண்டுமே திரைப்படத்தோடு  பயணிப்பது போல் உள்ளது.

இந்திய திரைப்பட உலகில் மட்டுமல்ல, உலக சினிமாவிலேயே கண்ணப்பா என்ற ஒருவரை தேட வேண்டுமென்றால், இந்த திரைப்படத்தினை பார்க்காமல் எவராலும் செல்ல முடியாது என்றளவிற்கு திரைப்படத்தினை உருவாக்கி இருக்கிறார்  விஷ்ணு மஞ்சு.,

மொத்தத்தில், இந்த கண்ணப்பா சிவன் மீது பக்தி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படமாக இந்த கண்ணப்பாவை உருவாக்கி சிவன் பக்தர்களை கொண்டாட வைத்திருக்கிறார்கள்.

error: Content is protected !!